31.7 C
Chennai
September 23, 2023
முக்கியச் செய்திகள்

அதிமுக பொதுக்குழுவுக்குத் தடை கோரிய மனு தள்ளுபடி!

அதிமுக பொதுக்குழு தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு மற்றும் பொதுக்குழுவுக்கு தடை விதிக்கக் கோரிய கூடுதல் மனுக்களைத் தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜூன் 23ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு தொடர்பான, பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில் மூன்று கூடுதல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. அவற்றில் நீதிமன்றத்தில் தெரிவித்த 23 தீர்மானங்களைத் தவிர, நிரந்தர அவைத் தலைவராக தமிழ்மகன் உசேனை நியமிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதால் அதை நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகக் கருதி இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, பொதுக்குழு உறுப்பினர்கள் சி.வி.சண்முகம், டி.ஜெயக்குமார், திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோரை தண்டிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இவர்களைத் தண்டிக்கும் விதமாக மேல்முறையீடு வழக்கில் எதிர்மனுதாரர்களாக சேர்க்க அனுமதிக்க வேண்டும் எனவும், அவைத் தலைவர் அறிவித்த அடுத்த பொதுக்குழு கூட்டம் குறித்த அறிவிப்பு செல்லாது என்பதால் ஜூலை 11ஆம் தேதி நடைபெறவுள்ள பொதுக்குழு கூட்டத்திற்கு தடைவிதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டு இருந்தது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த கூடுதல் மனுக்கள் நீதிபதிகள் எம்.துரைசாமி, சுந்தர் மோகன் அடங்கிய
அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தபோது, சண்முகம் தொடர்ந்த மேல்முறையீடு மனு மீதான விசாரணைக்கும், நீதிமன்ற அவமதிப்பு தொடர்பான வழக்கு விசாரணைக்கும் இடைக்காலத் தடை விதித்து உச்ச நீதிமன்றம் நேற்று பிறப்பித்த உத்தரவு எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது. அதை படித்துப் பார்த்த நீதிபதிகள், மேல்முறையீடு வழக்கு விசாரிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால், அதன் அடிப்படையில் தொடரப்பட்ட மூன்று கூடுதல் மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர். தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி பிறப்பித்த உத்தரவின் பிரதான மேல்முறையீடு வழக்கு ஜூலை 19ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to TelegramShare to Print

Related posts

தைவான் கடற்பகுதிக்குள் நுழைந்த அமெரிக்க போர்க்கப்பல்

G SaravanaKumar

காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி

Web Editor

நவராத்திரி விழா; கூத்தானூர் சரஸ்வதி அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு

G SaravanaKumar