நிர்வாணமாக போஸ் கொடுத்ததாக பிரபல வில்லன் நடிகர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பு

பள்ளி மாணவிகள் முன் ஆடையை கழற்றி நிர்வாண போஸ் கொடுத்ததாக பிரபல வில்லன் நடிகர் ஸ்ரீ ஜித் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுபடி சிறையில் அடைக்கப்பட்டார். கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ஸ்ரீ…

பள்ளி மாணவிகள் முன் ஆடையை கழற்றி நிர்வாண போஸ் கொடுத்ததாக பிரபல வில்லன் நடிகர் ஸ்ரீ ஜித் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுபடி சிறையில் அடைக்கப்பட்டார்.

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ஸ்ரீ ஜித் ரவி. கடந்த 2005ம் ஆண்டு மயூகம் என்ற மலையாள படம் மூலம் மலையாள திரையுலகில் நடிகராக அறிமுகமானார். தமிழில் அசுரவதம், கதகளி, மதயானை கூட்டம்,வேட்டை, கும்கி உள்பட பல படங்களில் வில்லன் வேடத்தில் நடித்துள்ளார். மேலும் சில படங்களில் நடித்து வரும் இவர் கடந்த சில நாட்களுக்கு முன் திருச்சூரில் 10ம் வகுப்பு படிக்கும் இரு மாணவிகள் முன் தனது ஆடையை கழற்றி நிர்வாணமாக அநாகரிகமாக நடந்து கொண்டுள்ளார். இதன் காரணமாக இன்று அதிகாலை திருச்சூர் மேற்கு காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

திருச்சூர் அய்யந்தோளில் உள்ள எஸ்.என்.பார்க் அருகே காரில் வந்த ஒருவர் பள்ளி மாணவிகள் முன் நிர்வாணமாக இருந்ததாகவும் மாணவிகளின் வீடு வரை பின் தொடர்ந்து சென்றதாகவும் மாணவிகள் அவர்களின் பெற்றோர்களிடம் தெரிவித்தனர். ஆனால் அவர் யார் என்று மாணவிகளுக்கு தெரியவில்லை. பின்னர் மாணவிகளின் பெற்றோர்கள் காவல்நிலையத்தில் இது தொடர்பாக புகார் அளித்தனர். காவல்துறையினர் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது அந்த கார் ஸ்ரீ ஜித் ரவிக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது. பின்னர் போலீசார் விசாரணை நடத்தி போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இதற்கிடையில் ஸ்ரீஜித் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கு மருந்து உட்கொள்வதாகவும் போலீசாரிடன் வாக்குமூலம் அளித்தார். இருப்பினும் போலீசார் அவரை கைது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

ஏற்கனவே 2016 ஆம் ஆண்டில் மாணவிகள் கூட்டாக பள்ளிக்கு நடந்து செல்லும் போது, ​​காருக்குள் நிர்வாணமாக இருந்ததாக பாலக்காடு காவல்துறையினரால் ஸ்ரீஜித் கைது செய்யப்பட்டார். பள்ளி செல்லும் மாணவிகளுடன் புகைப்படம் எடுக்க முயன்றதாகவும் கூறப்பட்ட நிலையில் அந்த வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டது குறிப்பிடதக்கது.

 

– தினேஷ் உதய் 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.