முக்கியச் செய்திகள் தமிழகம்

மெட்ராஸ் ஐ வந்தால் என்ன செய்ய வேண்டும்- அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்

மெட்ராஸ் ஐ டிசம்பர் 2வது வாரத்தில் குறைந்துவிடும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

மெட்ராஸ் ஐ தொற்று பரவல் அதிகமாக பரவி வரும் நிலையில் சென்னை எழும்பூர் கண் மருத்துவமனையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், செப்டம்பர் தொடங்கி டிசம்பர் முதல் வாரம் வரையிலும் மெட்ராஸ் ஐ என்று சொல்லக்கூடிய கண் நோய் பரவல் தொடர்ச்சியாக இருந்து வருகிறது. இந்த ஆண்டும் தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நாளிலிருந்து செப்டம்பர் முதல் வாரத்தில் இருந்து மெட்ராஸ் ஐ கண் பாதிப்பு கூடுதலாகி வருகிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

நோய் பாதிக்கப்பட்டவர்கள் பள்ளி, அலுவலகம் மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு செல்வதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். மெட்ராஸ் ஐ பாதிக்கப்பட்டவர்கள் சுய சிகிச்சை செய்யக்கூடாது. முறையான கண் மருத்துவர் அணுகி அவரின் பரிந்துரையின் பேரில் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.

வைரஸ் தாக்குதல் மூலமாக மெட்ராஸ் ஐ பாதிப்பு ஏற்படுகிறது. இந்த நோய் கண்ணில் உறுத்தல் மூலமாகவும், சிவப்பு நிறமாக கண் மாறுதல் போன்ற அறிகுறிகள் மூலமாக கண்டறியப்படுகிறது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கண்களை கையினால் தொடக்கூடாது. அப்படி தொட்டு விட்டு அருகே இருப்பவர்களை தொட்டால் அவர்களுக்கும் இந்த நோய் பரவும். இது எளிதில் பரவக்கூடிய நோய் பாதிப்பாகும்.

சென்னையில் கண் நோய்க்கான மருத்துவ மையங்கள் அரசின் சார்பில் 10 இடங்கள் இருக்கிறது. எழும்பூர் கண் மருத்துவமனை, ஸ்டான்லி, கீழ்பாக்கம் மருத்துவமனை, ஓமந்தூரார் உள்ளிட்ட பத்து இடங்களில் கண் சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகிறது.

தமிழகம் முழுவதும் ஒரு நாள் ஒன்றுக்கு மெட்ராஸ் ஐ பாதிக்கப்பட்டு 4000 முதல் 4500 வரை சிகிச்சைக்கு வருகிறார்கள். டிசம்பர் முதல் வாரம் வரையிலும் மெட்ராஸ் ஐ பாதிப்பு ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. அதன் பிறகு இதன் நோய் பாதிப்பு நீங்கிவிடும். மருத்துவர்களின் ஆலோசனை இல்லாமல் மருந்துகளை போட்டுக் கொள்ளக்கூடாது.  மெட்ராஸ் ஐ பாதிப்பு குறித்து அச்சப்பட வேண்டிய அவசியமில்லை. மெட்ராஸ் ஐ பாதிப்புக்கு வழங்கப்படும் மருந்து தட்டுப்பாடு இல்லை.

சேலம் , தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் மெட்ராஸ் ஐ பாதிப்பு அதிமாக உள்ளது. 23ம் தேதி 36 மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில, மாவட்ட மருத்துவமனைகள் வட்டார மருத்துவமனைகளில் உள்ள அறுவை சிகிச்சை நிபுணர்களுடன் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உள்ள கூட்டரங்கில் காலை 10 மணிக்கு தொடங்கி கருத்தரங்கம் நடைபெற உள்ளது.

பிரியா மரணம் தொடர்பான கேள்விக்கு, மருத்துவர்களின் சிகிச்சையில் எந்த குறைவும் இல்லை. மருத்துவரின் கவனக்குறைவு தான் காரணம். மருத்துவர்களின் பெயரில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் கொலை குற்றமாக்க கூடாது என்று மருத்துவர்களே தெரிவிக்கிறார்கள். 23ம் தேதி நடைபெறும் ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு அறுவை சிகிச்சை நிபுணர்கள் பின்பற்ற வேண்டிய புதிய வழிகாட்டு நெறிமுறைகளை அன்றே வெளியிடப்படும் என்று தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

’உங்களோடு நானும் களத்தில் நிற்கிறேன்…’: அதிகாரிகளுக்கு முதலமைச்சர் நன்றி

Halley Karthik

தனி விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார் நடிகர் ரஜினிகாந்த்!

Saravana

சிவகார்த்திகேயனுடன் ஏன் காய் விட்டார் அருண் விஜய்?

Vel Prasanth