முக்கியச் செய்திகள் இந்தியா

விஜய் திவாஸ்: டெல்லி போர் நினைவிடத்தில் பாதுகாப்புதுறை அமைச்சர் ராஜ்நாத்சிங் மரியாதை

விஜய் திவாஸ் நினைவு தினத்தையொட்டி டெல்லியில் உள்ள போர் நினைவிடத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

1971 ஆம் ஆண்டு நடந்த இந்தியா – பாகிஸ்தான் போரில் உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஆண்டு தோறும் டிசம்பர் 16ம் தேதி விஜய் திவாஸ் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதன்படி இன்று விஜய் திவாஸ் கொண்டாடப்பட்டது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதையொட்டி டெல்லி போர் நினைவிடத்தில் உயிரிழந்த வீரர்களுக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

இதேபோல், முப்படைகளின் தலைமை தளபதி அனில் சௌகான், ராணுவ தளபதி மனோஜ் பாண்டே, விமானப்படை தளபதி வி.ஆர். சௌத்ரி, இந்திய கடற்படை துணைதலைவர் எஸ்என் கோர்மேட் ஆகியோர் டெல்லி போர்நினைவிடத்தில் போரில் உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

இதுகுறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், 1971 போரில் இந்தியாவின் வெற்றியை உறுதி செய்த துணிச்சலான அனைத்து ஆயுதப்படை வீரர்களுக்கும் விஜய் திவாஸ் அன்று மரியாதை செலுத்திகிறேன். நாட்டை பாதுகாப்பாக வைத்திருப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் ஆயுதப்படைகளுக்கு நம் நாடு எப்போதும் கடமைப்பட்டிருக்கும் என்று பதிவிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ராகுல் காந்தியின் நடை பயணத்தில் பங்கேற்கும் சோனியா, பிரியங்கா

G SaravanaKumar

டேங்கர் லாரி மீது கார் மோதிய விபத்து: இருவர் உயிரிழப்பு

Arivazhagan Chinnasamy

’ஒன்றிய அரசு மாநில அரசுகளை மதிக்க வேண்டும்’ – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

EZHILARASAN D