நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவிடம் வலியுறுத்தியுள்ளதாக தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள் ளார்.
டெல்லியில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தலைமையில், அனைத்து மாநில சுகாதாரத்துறை அமைச்சர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், தமிழ்நாட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 11 மருத்துவக் கல்லூரிகளில் 850 மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு மட்டுமே அனுமதி உள்ளதாகவும், இதனை ஆயிரத்து 650 ஆக அதிகரிக்க வேண்டும் என வலியுறுத்தியதாக தெரிவித்தார்.
மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகளை விரைவு படுத்தவும், கோவையில் புதிய எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வேண்டும் எனவும் நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என வலியுறுத்தியதாகவும் அவர் கூறினார்.







