காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்திக்கு இன்று பிறந்தாள் ஆகும். இதனை தொடர்ந்து பல்வேறு கட்சினரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் ராகுல் காந்திக்கு திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், “மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். உங்களுக்கு நல்ல ஆரோக்கியமும் மகிழ்ச்சியும் கிடைக்க வாழ்த்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.




