முக்கியச் செய்திகள் தமிழகம்

3 மணி நேர போராட்டத்திற்கு பின் வட மாநில இளைஞரை மீட்ட காவல்துறை

3 மணி நேர போராட்டத்திற்கு பின் பயணிகள் நடைபாதை பகுதியில் உள்ள கம்பியில் மூன்று மணி நேரமாக  அமர்ந்தவாறு இருந்த வட மாநில இளைஞரை பத்திரமாக மீட்டட்னர்.

சென்னை திருவொற்றியூர் ரயில் நிலையத்தில்  வட மாநிலத்தைச் சேர்ந்த லட்சுமணன் என்கின்ற இளைஞர் ஒருவர் நேற்று மதியம் பயணிகள் நடைபாதை பகுதியில் உள்ள கம்பியில் ஆபத்தான நிலையில் தொடர்ந்து மூன்று மணி நேரமாக  அமர்ந்தவாறு இருந்தார். தகவல் அறிந்து வந்த போலீசார் இளைஞரிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

மேலும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்களும் சம்பவ இடத்திற்கு வந்து இளைஞரிடம் தொடர்பு பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வந்தனர்.
மேலும் இளைஞருக்கு மது பாட்டில் கொடுத்து சாதுரியமாக போலீசார் செயல்பட்டு
அவனை பத்திரமாக மீட்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டனர்.

ஆனால் அந்த இளைஞர் போலீசாரிடம் தான் மது பாட்டிலை எடுத்துக் கொள்கிறேன், இங்கு கூடிய கூட்டத்தை உடனடியாக அப்புறப்படுத்துங்கள் என கூறியுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கின்றனர்.


மேலும் இளைஞர் கம்பியின் மேல் அமர்ந்தவாறு இருப்பதைக் கண்ட அப்பகுதியில் செல்லக்கூடிய மக்கள் அங்கு கூட்டம் கூடியதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து தீயணைப்புத் துறையினர் இளைஞர் கீழே குதித்தால் அவரை பத்திரமாக மீட்பதற்காக தார்பாய்கள் கொண்டு ஈடுபட்டனர். இதில் ரயில்வே போலீசார் மற்றும் திருவொற்றியூர் சட்டம் ஒழுங்கு போலீசார் இளைஞரை சாதுரியமாக செயல்பட்டு இளைஞரை பத்திரமாக மீட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

தற்காலிக ஆசிரியர் பணி நியமன முடிவை அரசு கைவிட வேண்டும்-சீமான் வலியுறுத்தல்!

Web Editor

ஆளுநர்கள் மாநிலங்களுக்கு தடைக்கற்கள்தான் – 6 பேர் விடுதலை வழக்கு குறித்து சீமான் கருத்து

NAMBIRAJAN

சினிமாவுக்கு வந்து 50 வருடம்: வாழ்த்துகளால் திக்குமுக்காடிய மம்மூட்டி

Gayathri Venkatesan