முக்கியச் செய்திகள் தமிழகம்

இந்தி திணிப்பை எதிர்த்து உயிரிழந்த திமுக நிர்வாகி; ஆறுதல் தெரிவித்த முதலமைச்சர்

மேட்டூர் அடுத்த தாளையூரில் இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து உயிரிழந்த திமுக பிரமுகர் தங்கவேல் மனைவி ஜானகியிடம் முதல்மைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு ஆறுதல் தெரிவித்தார்.

மேட்டூர் அடுத்த பி .என் .பட்டி பேரூராட்சிக்குட்பட்ட தாளையூரை சேர்ந்தவர் தங்கவேல் (85). இவர் திமுக,வில் இரண்டு முறை கிளைக்கழக செயலாளர், பி.என், பட்டி
பேரூர் துணை செயலாளர், பேரூர் அவைத் தலைவர், நங்க வள்ளி ஒன்றிய விவசாய அணி அமைப்பாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை வகித்து வந்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில் மத்திய அரசின் இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்துக் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தாளையூரில் உள்ள திமுக கட்சி அலுவலகத்தில் தங்கவேல் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து வைத்துக் கொண்டு இந்தி ஒழிக என்று கூச்சலிட்டவாறே உயிரிழந்தார்.

இதனை அடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி தங்கவேலின் இறுதிச் சடங்கிற்குத் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன் முதல் கட்டமாக ஒரு லட்சம் ரொக்கம் வழங்கினார். இந்நிலையில் இன்று இரவு தாளையூரில் உள்ள திமுக கட்சி அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்ட தங்கவேலின் உருவப்படத்திற்கு
நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு மலர் தூவி அஞ்சலி செலுத்தி குடும்பத்தாரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி தலைமை கழகம் சார்பில் 5 லட்சமும்ம் , மாவட்ட கழகம் சார்பில் 5 லட்சம் என மொத்தம் 10 லட்சத்திற்கான காசோலையைத் தங்க வேலின் மனைவி ஜானகி அம்மாவிடம் அமைச்சர் வழங்கினார். முதல்வர் மு.க.ஸ்டாலின் செல்போனில் தொடர்பு கொண்டு ஜானகி அம்மாவிடம் ஆறுதல் தெரிவித்தார்.

பின்னர் தங்களது குடும்பத்தைச் சார்ந்த ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என தங்கவேலுவின் குடும்பத்தினர் அமைச்சரிடம் கோரிக்கை வைத்தனர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கார்மேகம்,ராஜேந்திரன் எம்எல்ஏ, சேலம் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் டி .எம் .செல்வ கணபதி , மேற்கு மாவட்ட துணை செயலாளர் சம்பத் குமார் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் ஏராளமானவர் கலந்து கொண்டனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

மகாராஷ்ட்ர ஆளுநரின் சர்ச்சை பேச்சு–தாக்கரே கடும் எதிர்ப்பு

Mohan Dass

தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு மழை

EZHILARASAN D

80 சதவீத ஊழியர்கள் ஹிந்துக்கள்-லக்னோ லூலூ மால் தகவல்

Web Editor