இன்று சந்திரகிரகணம்; வெறும் கண்களால் பார்க்கலாமா?

நடப்பாண்டின் கடைசி சந்திரகிரகணம் இன்று பிற்பகலில் நடைபெற உள்ள நிலையில், சென்னையில் சுமார் 20 நிமிடத்துக்கு நீடிக்கும் என்று அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர். சூரியன், பூமி, நிலவு ஆகியவை மிகத் துல்லியமாகவோ அல்லது ஏறத்தாழவோ, ஒரே…

நடப்பாண்டின் கடைசி சந்திரகிரகணம் இன்று பிற்பகலில் நடைபெற உள்ள நிலையில், சென்னையில் சுமார் 20 நிமிடத்துக்கு நீடிக்கும் என்று அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சூரியன், பூமி, நிலவு ஆகியவை மிகத் துல்லியமாகவோ அல்லது ஏறத்தாழவோ, ஒரே வரிசையில் வரும்போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது. சூரிய ஒளியில் இருந்து பூமியால் நிலவு மறைக்கப்படும் போது இந்த சந்திர கிரகணம் நிகழ்கிறது.அப்போது, சந்திரன் முழுமையாக மறைக்கப்படும் பட்சத்தில் பூரண சந்திர கிரகணம் என்றும், ஒரு பகுதி மட்டும் மறைக்கப்பட்டால் பார்சுவ சந்திர கிரகணம் என்றும் அழைக்கப்படுகிறது. சந்திர கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்கலாம் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

அந்த வகையில், இந்திய நேரப்படி, இன்று மதியம் 2.39 மணிக்கு சந்திர கிரகணம் தொடங்குகிறது. முழு கிரகணம் 3.46 மணிக்கு தொடங்கி 5.12 மணிக்கு நிறைவடைய உள்ளது. சென்னையை பொறுத்தவரை சந்திரன் உதயத்தின்போது முழு சந்திர கிரகணமும் அது முடிந்த பிறகு பகுதி நேர கிரகணமும் ஏற்படும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளது.

இந்த சந்திர கிரகணம் சுமார் 40 நிமிடம் நீடிக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளனர். 3 ஆண்டுகளுக்கு பிறகே அடுத்த முழு சந்திர கிரகணம் ஏற்படும் என்றும் பகுதி நேர சந்திர கிரகணம் அடுத்த ஆண்டு அக்டோபர் 28 ஆம் தேதி நடைபெறும் என்றும் அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.