டி20 உலக கோப்பையில் அரைறுதி போட்டிக்கான பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது கேப்டன் ரோகித் ஷர்மாவுக்கு கையில் காயம் ஏற்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது. இதில் சூப்பர் 12 சுற்றில் சிறப்பாக விளையாடிய இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன.
இறுதி கட்டத்தை நோக்கி நகரும் டி20 உலக கோப்பை போட்டியில் நாளை அரையிறுதி போட்டிகள் தொடங்குகிறது. இதில் சிட்னியில் நாளை நடக்கும் முதலாவது அரைஇறுதியில் பாகிஸ்தான்- நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. மற்றொரு அரைஇறுதியில் இந்திய அணி, இங்கிலாந்தை நாளை மறுதினம் அடிலெய்டில் எதிர்கொள்கிறது.
இதையடுத்து அனைத்து நாடுகளும் தீவிர வலைபயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். தென்ஆப்பிரிக்காவின் தோல்வியால் அரையிறுத்திக்குள் நுழைந்த பாகிஸ்தான் அணி நியூசிலாந்துடன் நாளை பலபரீட்சை நடத்தவுள்ளது.
இதேபோல் அரையிறுதி போட்டிக்கு தயாராவதற்கு இந்திய அணி வீரர்கள் அடிலெய்டில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்த நிலையில் பயிற்சியில் ஈடுப்பட்டுக் கொண்டிருந்த இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு வலது கையில் காயம் ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து சிறிது நேரம் ஓய்வில் இருந்த ரோகித் சர்மா பின்னர் தனது பயிற்சியை தொடங்கினார். இதனால் அவருக்கு ஏற்பட்ட காயம் அரையிறுதி போட்டியில் விளையாட பாதிப்பை ஏற்படுத்தாது என கூறப்படுகிறது.







