இன்ஸ்டாவில் அதிக நேரம் செலவழித்த மனைவி; கொலை செய்த கணவர்

சமூக வலைதளங்களில் மூழ்கிய மனைவியை கழுத்தை நெறித்து கொலை செய்த கணவனை போலீசார் கைது செய்தனர். திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு பகுதியைச் சேர்ந்தவர் அமிர்தலிங்கம் (38), இவர் தனது மனைவி சித்ரா (35) மற்றும்…

சமூக வலைதளங்களில் மூழ்கிய மனைவியை கழுத்தை நெறித்து கொலை செய்த கணவனை போலீசார் கைது செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு பகுதியைச் சேர்ந்தவர் அமிர்தலிங்கம் (38), இவர் தனது மனைவி சித்ரா (35) மற்றும் இரண்டு மகள்களுடன் திருப்பூர் செல்லம் நகரில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். திருப்பூர் தென்னம்பாளையம் காய்கறி சந்தையில் கூலித் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சித்ரா டிக்டாக்கில் அதிக ஈடுபாடு கொண்டவர் எனக் கூறப்படுகிறது. டிக்டாக் தடை செய்யப்பட்ட பின்னர் ரீல்ஸ், இன்ஸ்டா என அதிலேயே தனது நேரத்தை அதிக அளவில் செலவழித்துள்ளார்.

இதில் அதிக ஃபாலோவர்கள் கிடைத்த நிலையில் அதன் மூலம் கிடைத்த சினிமா நண்பர்கள் உதவியுடன் சினிமாவில் நடிக்க வேண்டும் என கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு சித்ரா தனியாக சென்னையில் குடியேறியுள்ளார்.

இந்நிலையில் திருப்பூரில் நடைபெற்ற தனது மூத்த மகளின் திருமணம் பங்கேற்றுள்ளார். மகளின் திருமணம் முடிந்த பிறகு, மீண்டும் சென்னைக்கு போவதாக கணவரிடம் கூறியுள்ளார். இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் ஆத்திரமடைந்த அமிர்தலிங்கம், சித்ரா கழுத்தில் அணிந்திருந்த துப்பட்டாவால் அவர் கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தலைமறைவாக இருந்த அமிர்தலிங்கத்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.