ஐபிஎல் 2025: 172 ரன்கள் இலக்கு வைத்த லக்னோ… 2வது வெற்றியை பதிவு செய்யுமா பஞ்சாப்?

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ அணி 7 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் குவிப்பு…

அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த ஐபிஎல் 2025 தொடர் கடந்த 22ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. தொடரின் 13வது போட்டியில் பஞ்சாப் மற்றும் லக்னோ அணிகள் இன்று மோதி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்துள்ளது. இதன்மூலம் பஞ்சாப் அணிக்கு 172 அணிகள் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. லக்னோ தரப்பில் அதிகபட்சமாக நிக்கோலஸ் பூரன் 44 ரன்களும், ஆயுஷ் பதோனி 41 ரன்களும் எடுத்தனர். பஞ்சாப் தரப்பில் அர்தீப் ஷிங் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.