அரசு பள்ளிகளில் கடந்த ஒரு மாதத்தில் 1.17 லட்சம் மாணவர்கள் சேர்ந்துள்ளனர் – அமைச்சர் அன்பில் மகேஸ்!

தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 1,17,310 மாணவர்கள் சேர்க்கை…

தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் மார்ச் முதல் மாணவர் சேர்க்கை தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், தற்போது வரை 1 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் சேர்ந்துள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில்,

 “தமிழ்நாடு முழுவதும் அரசுப் பள்ளிகளில் 2025 – 2026-ஆம் கல்வி ஆண்டிற்கான மாணவச் சேர்க்கையை மார்ச் 1-ஆம் தேதி சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அன்றிலிருந்து ஏராளமான பெற்றோர் தங்கள் பிள்ளைகளை ஆர்வமுடன் அரசுப்பள்ளிகளில் சேர்த்து வருகிறார்கள்.

சேர்க்கை தொடங்கியது முதல் கடந்த ஒரு மாதத்தில் மாநிலம் முழுவதும் 1-ஆம் வகுப்பிற்கு 1,05,286 மழலையர் உட்பட ஏனைய வகுப்புகளும் சேர்த்து மொத்தம் 1,17,310 மாணவச் செல்வங்கள் சேர்ந்துள்ளனர். அனைவருக்கும் வாழ்த்துகள். தொடர்ந்து மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. கல்வியின் துணை கொண்டு உலகை வெல்ல நம் அரசுப்பள்ளிகளே தலைசிறந்த முறையில் அடித்தளமிடும்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.