முக்கியச் செய்திகள் சினிமா

’ஆச்சார்யா’வுக்கு பிறகு ’லூசிஃபர்’ ரீமேக் தொடங்கும்: படக்குழு தகவல்!

’லூசிஃபர்’ படத்தின் ரீமேக் கைவிடப்பட்டதாக வந்துள்ள தகவலை படக்குழு மறுத்துள்ளது.

நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில், மோகன்லால் ஹீரோவாக நடித்து மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான படம், ‘லூசிஃபர்’. மஞ்சு வாரியர், இந்தி நடிகர் விவேக் ஓபராய், ஜான் விஜய் உட்பட பலர் நடித்திருந்த இந்தப் படம், மலையாளத் திரைப்பட உலகில் வசூல் சாதனை நிகழ்த்தியது. மலையாளத்தில் ரூ.200 கோடி வசூலைக் குவித்த முதல் படம் ‘லூசிஃபர்’ என்று கூறப்பட்டது.

இந்தப் படத்தின் தெலுங்கு ரீமேக் உரிமையை பிரபல ஹீரோவும் சிரஞ்சீவியின் மகனுமான ராம் சரண் பெற்றார். அதில் மோகன்லால் கேரக்டரில் சிரஞ்சீவி நடிக்கிறார். தற்போது ஆச்சார்யா படத்தில் நடித்து வரும் சிரஞ்சீவி, அந்தப் படத்துக்குப் பிறகு, லூசிஃபர் ரீமேக்கில் நடிக்க இருக்கிறார்.

இந்தப் படத்தை மோகன் ராஜா இயக்குகிறார். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி இருந்தது. தெலுங்குக்காக கதையில் மாற்றங்கள் செய்யப்படுகிறது. இந்நிலையில் இந்தக் கதையில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் சிரஞ்சீவிக்குத் திருப்தியாக இல்லை என்றும் இதனால், இந்தப் படத்தில் நடிக்கும் முடிவை, நடிகர் சிரஞ்சீவி கைவிட்டுவிட்டார் என்றும் பரபரப்பு செய்திகள் வெளியானது.

இந்நிலையில் இந்தப் படம் நிறுத்தப்படவில்லை என்று இப்போது செய்திகள் வெளியாகியுள்ளது. ’ஆச்சார்யா படத்தின் ஷூட்டிங் இன்னும் முடியவில்லை. அது முடிந்தபின் லூசிஃபர் படத்தின் ரீமேக் தொடங்கும். படத்துக்கு கிங்மேக்கர் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது’ என்றும் கூறப்படுகிறது.

Advertisement:

Related posts

வாக்கு எண்ணும் மையங்களில் நான்கடுக்கு பாதுகாப்பு!

Ezhilarasan

அதிமுக ஆட்சியில் மக்கள் பல்வேறு இன்னல்களை அனுபவிக்கின்றனர் : மு.க.ஸ்டாலின்

Gayathri Venkatesan

இனிமேல் 8 போடத் தேவையில்லை!

Jeba