#LubberPandhu | படக்குழுவினருக்கு இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் பாராட்டு!

தமிழரசன் பச்சமுத்து இயக்கிய ‘லப்பர் பந்து’ திரைப்படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் பாராட்டியுள்ளார். பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரித்த ‘லப்பர் பந்து’ திரைப்படம் கிரிக்கெட் விளையாட்டை மையமாக கொண்ட கதையாகும். இதனை அறிமுக இயக்குநர் தமிழரசன்…

LubberPandhu,Movie, CinemaUpdates, HarishKalyan, GethuDinesh,Director, KarthikSubbaraj

தமிழரசன் பச்சமுத்து இயக்கிய ‘லப்பர் பந்து’ திரைப்படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் பாராட்டியுள்ளார்.

பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரித்த ‘லப்பர் பந்து’ திரைப்படம் கிரிக்கெட் விளையாட்டை மையமாக கொண்ட கதையாகும். இதனை அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து எழுதி இயக்கியுள்ளார். மேலும் இந்த திரைப்படத்தில் அட்டகத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்த திரைப்படத்தில் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, பால சரவணன், காளி வெங்கட், ஸ்வாசிகா விஜய் உள்ளிட்ட பலர் நடித்து உள்ளனர். இந்த திரைப்படத்துக்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். தினேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். ‘லப்பர் பந்து’ திரைப்படம் கடந்த செப்டம்பர் 20ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. மேலும் பல்வேறு தரப்பினரும் இந்த திரைப்படத்தை பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் ‘லப்பர் பந்து’ திரைப்படத்திற்கு இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள் : Kerala | கோயில் திருவிழாவில் பட்டாசு வெடித்து விபத்து – 150க்கும் மேற்பட்டோர் படுகாயம்… 8 பேர் கவலைக்கிடம்!

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் :

“லப்பர் பந்து திரைப்படம் அழகான நடிப்பு திறனால் உருவாக்கப்பட்ட, மகிழ்ச்சி அடைய செய்த சிறப்பான திரைப்படம். கெத்து மற்றும் மைதானத்தில் அவருக்கு உருவாக்கப்பட்ட பில்டு-அப்களை ரசித்தேன். அறிமுக படத்தை சிறப்பாக வழங்கிய தமிழரசன் பச்சமுத்துவுக்கு வாழ்த்துக்கள். படத்தில் நடித்த தினேஷ், ஹரிஷ் கல்யாண், ஸ்வாசிகா, சஞ்சனா, காளி வெங்கட், பால சரவணன், இசையமைப்பாளர் ஷான் ரோல்டன், ஒளிப்பதிவாளர் தினேஷ்குமார் புருஷோத்தமன், பிரின்ஸ் பிக்சர்ஸ் மற்றும் ஒட்டுமொத்த படக்குழுவுக்கும் வாழ்த்துக்கள்”

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.