12-ம் தேதி வரை கனமழை தொடரும்.. #Tamilnadu -க்கு ஆரஞ்ச் அலர்ட்!

தமிழ்நாட்டில் சில மாவட்டங்களில் நாளை முதல் 12ம் தேதி வரை ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அரபிக்கடலில் வரும் 9 ஆம் தேதி அன்று குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று இந்திய வானிலை…

Low pressure forming over Arabian Sea... #IMD info!

தமிழ்நாட்டில் சில மாவட்டங்களில் நாளை முதல் 12ம் தேதி வரை ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

அரபிக்கடலில் வரும் 9 ஆம் தேதி அன்று குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால், அக் – 9ம் தேதி முதல் வரும் 12ம் தேதி வரை தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதையும் படியுங்கள் :Parandur விமான நிலையம் திட்டத்துக்கு நிலம் எடுக்க எதிர்ப்பு தெரிவித்த கிராம மக்கள் | மறியலில் ஈடுபட்டோர் கைது!

வரும் 9ம் தேதி லட்சத்தீவு மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இதனால், மன்னார் வளைகுடா, தென் தமிழ்நாடு கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் சூறாவளிக்காற்று வீசக்கூடும் என அறிவித்துள்ளது. அதன் பின் வடமேற்கு நோக்கி நகர வாய்ப்புள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தேனி, மதுரை, திண்டுக்கல், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர் ஆகிய மாவட்டங்களுக்கு நாளை முதல் 12ம் தேதி வரை ஆரஞ்ச் அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.