வங்கக்கடலில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 16ம் தேதி தொடங்கியது. இந்நிலையில், வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று அறிவித்துள்ளது. தெற்கு மியான்மர் கடலோர பகுதிகள் மற்றும் வடக்கு அந்தமான் கடல் பகுதிக்கு மேல் காணப்படும் மேலடுக்கு சுழற்சியால் அந்தமான் மற்றும் நிகோபார் தீவு பகுதிகளில் இன்று கனமழை பெய்ய கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மியான்மர் நோக்கி நகரும் என்றும் கூறப்படுகிறது.
கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று முதல் 2 நாட்களுக்கு தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தற்போது உருவாகி உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்திற்கு பாதிப்பு இருக்காது என்று கூறப்பட்டுள்ளது.







