காவல்நிலையத்தில் தஞ்சம் அடைந்த காதல் ஜோடி; உறவினர்கள் இடையே மோதல்!

ஓமலூர் காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம் அடைந்தபோது, அவர்களது உறவினர்கள் காவல் நிலையத்திலேயே ஒருவருக்கொருவர் மோதிக் கொண்டனர். சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள தாராபுரம் பகுதியை சேர்ந்த கோபி…

ஓமலூர் காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம் அடைந்தபோது, அவர்களது உறவினர்கள் காவல் நிலையத்திலேயே ஒருவருக்கொருவர் மோதிக் கொண்டனர்.

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள தாராபுரம் பகுதியை சேர்ந்த கோபி அதே பகுதியில் காய்கறி கடை வைத்து நடத்தி வருகிறார். அவர் அதே பகுதியைச் சேர்ந்த திவ்யாவை கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இருவரும் வெவ்வேறு சமூகம் என்பதால் திவ்யாவின் வீட்டில் இவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு இருவரும் வீட்டை விட்டு வெளியேறி கோயிலில் திருமணம் செய்து கொண்டனர்.

இதனையடுத்து ஓமலூர் காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு இருவரும் தஞ்சமடைந்தனர். இதுகுறித்து போலீசார் அவர்கள் பெற்றோர்களுக்கு தகவல் கொடுத்து வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இருவீட்டார் உறவினர்களும் ஒருவருக்கொருவர் தகராறில் ஈடுபட்டு மோதிக்கொண்டதால் காவல்நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் இருதரப்பையும் சமாதானப்படுத்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply