வாழ்வில் நிறைய இழப்புகளை அனுபவித்துவிட்டதாகவும், வலிகளுடன் வாழ பழகிக் கொண்டிருப்பதாகவும் நடிகர் விஜய் ஆண்டனி உருக்கமாக தெரிவித்துள்ளார்.
சென்னை வடபழனி பிரசாத் லேபில் சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிக்கும் ‘ரத்தம்’ திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. இதில் இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி, நடிகைகள் மகிமா நம்பியார், நந்திதா உள்ளிட்ட படக்குழுவினர் பலர் கலந்துகொண்டனர்.
தனது இளைய மகள் லாராவுடன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் விஜய் ஆண்டனி, இயக்குநர் அமுதனுக்கும் தனக்கும் நீண்ட நாள் நட்பு தொடர்வதாக தெரிவித்தார். மேலும் ‘ரத்தம்’ திரைப்படத்தின் மூலம் ஒன்றாக இணைந்து பணியாற்ற வேண்டும் என்ற நீண்ட நாள் எதிர்பார்ப்பு நிறைவேறி உள்ளதாக தெரிவித்தார்.
இதையும் படியுங்கள் : நிபா வைரஸால் பாதிக்கப்பட்ட 4 பேர் குணமடைந்தனர் – கேரள அமைச்சர் தகவல்
பின்னர் நேர்காணல் ஒன்றில் பேசிய விஜய் ஆண்டனி, ”வாழ்க்கையில் அடுத்தது என் நடக்கும் என்பது யாருக்கும் தெரியாது. என்னுடைய வாழ்வில் நிறைய இழப்புகளை அனுபவித்துவிட்டேன். இப்போது, வலிகளுடன் வாழப் பழகிக் கொண்டிருக்கிறேன். நான் பெரிய தத்துவவாதி இல்லை. ஆனால், எனக்கு ஏற்பட்ட இழப்புகளின் மூலம் நிறைய கற்றுக்கொண்டேன்” என்று உருக்கமாகக் கூறினார்.








