உருளைக்கிழங்கு முதல் கத்தரிக்காய் பஜ்ஜி வரை பார்த்தாச்சு…இது என்ன காஜீ கத்லி பஜ்ஜி?

குஜராத் மாநிலத்தை சேர்ந்த பெண் ஒருவர் காஜீ கத்லியை வைத்து பஜ்ஜி தயாரிக்கும் வீடியோ சமுக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. சமீப காலங்களில், பொது மக்களிடையே வித்தியாசமான உணவுகளின் மீது உள்ள ஆர்வம் அதிகரித்துள்ளது. …

குஜராத் மாநிலத்தை சேர்ந்த பெண் ஒருவர் காஜீ கத்லியை வைத்து பஜ்ஜி தயாரிக்கும் வீடியோ சமுக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

சமீப காலங்களில், பொது மக்களிடையே வித்தியாசமான உணவுகளின் மீது உள்ள ஆர்வம் அதிகரித்துள்ளது.  இதன் விளைவாக, குலோப் ஜாமுன் ஐஸ்கிரீம், குலோப் ஜாமுன்% பர்கர்,  குலோப் ஜாமுன் சமோசா,  ஐஸ்கிரீம் மசாலா தோசை,  ஐஸ்கிரீம் நூடுல்ஸ், ஐஸ்கிரீம் இட்லி போன்ற விநோதமான உணவு கலவைகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதையும் படியுங்கள் : ரசிகர்களிடையே எழுந்த சந்தேகத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த நயன்தாரா!

அந்த வகையில்,  தற்போது குஜராத் மாநிலத்தை சேர்ந்த பெண் ஒருவர் வித்தியாசமான உணவை சமைக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.  பஜ்ஜி என்பது மாலை நேரத்தில் டீ அல்லது காபியுடன் சேர்த்து சாப்பிட விரும்பும் ஒரு சிற்றுண்டியாக இருக்கிறது. அந்த பஜ்ஜியில் காய்கறிகள், பன்னீர், இறைச்சி சேர்த்து செய்வது தான் அனைவரின் வழக்கம்.

ஆனால், குஜராத் மாநிலத்தை சேர்ந்த பெண் ஒருவர் காஜீ கத்லியை வைத்து பஜ்ஜி செய்வது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  பஜ்ஜி மாவில் காஜீ கத்லியை பூசி,  பின்னர் சூடான எண்ணெயில் வறுத்தெடுப்பது வீடியோவில் இடம் பெற்றுள்ளது. .

https://twitter.com/MFuturewala/status/1765309102304211050?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1765309102304211050%7Ctwgr%5Ef64e3edf87950221434c7c3cadc944c2a0ca714b%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.hindustantimes.com%2Ftrending%2Fvideo-of-woman-making-kaju-katli-pakoda-leaves-people-saying-it-s-just-madness-watch-101709821018345.html

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.