நடிகர் விஜய் – ஹெச். வினோத் கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் ’ஜனநாயகன்’. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருக்கும் புக்கீட் ஜலீல் ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் விஜய், பூஜா ஹெக்டே அனிரூத் உள்ளிட்ட படக்குழுவினருடன் நெல்சன், லோகேஷ் கனகராஜ், அட்லி உள்ளிட்ட இயக்குநர்களும் கலந்து கொண்டுள்ளனர்.
இசை வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ; “லியோ, மாஸ்டர் ஆகியவை என் சினிமா வாழ்க்கையில் முக்கியமான படங்கள். உங்களுடைய கடைசி படம் ஜன நாயகன் என்பது எனக்கு வருத்தமாக இருக்கிறது. ஜனநாயகன் திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துக்கள். உங்களின் பெரிய ஆசையும் வெற்றி பெற வாழ்த்துக்கள்” என்றார்.







