36.1 C
Chennai
May 30, 2024
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

மக்களவைத் தேர்தல் 2024 : தற்போது வரை திமுக – அதிமுக நேரடியாக களம் காணும் தொகுதிகள் எவை?

மக்களவைத் தேர்தலில் தற்போதைய நிலவரப்படி திமுக – அதிமுக நேரடியாக களம் காணும் தொகுதிகள் எவை என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. பதிவான வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு, அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏப்ரல் 19-ம் தேதி ஒரே கட்டமாக தமிழ்நாட்டில் தேர்தல் நடக்கவுள்ளது. இன்று (மார்ச் 20) முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்கியுள்ளது.  இதனால் கூட்டணி, தொகுதி பங்கீட்டை நிறைவு செய்ய அரசியல் கட்சிகள் தீவிரமாக பணிபுரிந்து வருகின்றன.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அந்த வகையில் தமிழ்நாட்டில் திமுக ஏற்கனவே கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் என்பதை உறுதி செய்துவிட்டதை தொடர்ந்து, கூட்டணி கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதி குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. வடசென்னை, தென்சென்னை, மத்திய சென்னை, காஞ்சிபுரம் (தனி), கோவை, தூத்துக்குடி உள்பட 21 தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது. இந்த தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

இதேபோல அதிமுகவும் கூட்டணி இறுதி செய்துள்ளது. அதன்படி அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிகவுக்கு 5 தொகுதிகளும் , எஸ்டிபிஐ கட்சிக்கு 1தொகுதியும், புதிய தமிழகம் கட்சிக்கு ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் 16 பேர் கொண்ட முதற்கட்ட அதிமுக வேட்பாளர்களின் பட்டியலை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டார். மீதமுள்ள வேட்பாளர்களின் பட்டியலை விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போதைய நிலவரப்படி திமுக – அதிமுக நேரடியாக களம் காணும் இடங்கள் :

வட சென்னை

  • திமுக – கலாநிதி வீராசாமி
  • அதிமுக – ராயபுரம் மனோ

தென் சென்னை

  • திமுக – சுமதி (எ) தமிழச்சி தங்கபாண்டியன்
  • அதிமுக – ஜெயவர்தன்

அரக்கோணம்

  • திமுக – ஜெகத்ரட்சகன்
  • அதிமுக – விஜயன்

ஆரணி

  • திமுக – தரணிவேந்தன்
  • அதிமுக -கஜேந்திரன்

சேலம்

  • திமுக – செல்வகணபதி
  • அதிமுக – விக்னேஷ்

ஈரோடு

  • திமுக – பிரகாஷ்
  • அதிமுக – ஆற்றல் அசோக்குமார்

தேனி

  • திமுக – தங்க தமிழ்செல்வன்
  • அதிமுக – நாரயணசாமி

காஞ்சிபுரம் (தனி)

  • திமுக – செல்வம்
  • அதிமுக – ராஜசேகர்

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading