பார்சல் வாங்கிய சிக்கன் பிரியாணியில் இறந்து கிடந்த வெட்டுக்கிளி: போலீஸாா் விசாரணை..!

நாமக்கல் மாவட்டத்தில் வாடிக்கையாளருக்கு வழங்கப்பட்ட பிரியாணியில் வெட்டுக்கிளி இறந்து கிடந்தது தொடர்பாக கடை உரிமையாளரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். நாமக்கல் மாவட்டத்தில் பரமத்தி வேலூா் நான்கு சாலை அருகில், கேரளத்தைச் சோ்ந்த அப்துல் காதா்…

நாமக்கல் மாவட்டத்தில் வாடிக்கையாளருக்கு வழங்கப்பட்ட பிரியாணியில் வெட்டுக்கிளி இறந்து கிடந்தது தொடர்பாக கடை உரிமையாளரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர்.

நாமக்கல் மாவட்டத்தில் பரமத்தி வேலூா் நான்கு சாலை அருகில், கேரளத்தைச் சோ்ந்த அப்துல் காதா் என்பவர் அசைவ உணவகம் நடத்தி வருகிறார். இவரது கடையில் இரு தினங்களுக்கு முன் பரமத்தியைச் சேர்ந்த டேவிட் (35) என்பவர், சிக்கன் பிரியாணியை பார்சல் வாங்கிச் சென்றுள்ளார். பின்னர் வீட்டிற்கு சென்று அந்த பார்சலை பிரித்துள்ளார்.

தொடர்ந்து அதை சாப்பிட முயன்றபோது, பிரியாணியில் வெட்டுக்கிளி கிடந்ததைக் கண்டு அதிா்ச்சியடைந்துள்ளார். அதன்பிறகு, சம்பந்தப்பட்ட கடைக்குச் சென்று பிரியாணியில் வெட்டுக்கிளி இறந்து கிடப்பதாகவும், இதனை எவ்வாறு சாப்பிட முடியும் எனவும் கேட்டுள்ளார். நீங்களாகவே வெட்டுக்கிளியை போட்டு வந்துள்ளீர்கள் என கடை உரிமையாளர் தெரிவித்ததால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

பின்னர் இது தொடா்பாக பரமத்திவேலூர் காவல்துறையினரிடம் டேவிட் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் பிரியாணி கடைக்கு சென்று போலீஸார் விசாரணை நடத்தினர். மேலும், உணவு பாதுகாப்புத் துறையிடம் புகாா் அளிக்குமாறு டேவிட்டிடம் அறிவுறுத்தியுள்ளனர். பிரியாணியில் வெட்டுக்கிளி இருந்த சம்பவம் அப்பகுதி உணவு பிரியர்கள் மத்தியில் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.