முக்கியச் செய்திகள் கொரோனா தமிழகம் செய்திகள்

தமிழ்நாட்டில் ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு!

தமிழகத்தில் சில தளர்வுகளுடன் ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: கொரோனா பரவலைத் தடுப்பதற்காக, இந்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாட்டில் 25-3-2020 முதல் ஊரடங்கு சில தளர்வுகளுடன் நடைமுறையில் இருந்து வருகிறது.

இந்த ஊரடங்கு 30-6-2021 வரை தொடர்ந்து அமலில் இருக்கும் என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஊரடங்கு 14-6-2021 அன்று காலை 6 மணிக்கு முடிவுக்கு வரும் நிலையில், நோய்த் தொற்றின் தன்மையினை மாவட்ட வாரியாக ஆய்வு செய்தும், நோய்த் தொற்று பரவாமல் தடுத்து, மக்களின் உயிர்களைக் காக்கும் நோக்கத்திலும், 21-6-2021 வரை, ஒரு வார காலத்திற்கு நீட்டிப்பு செய்து உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு கூறியுள்ளார்.

Advertisement:

Related posts

கருப்பு பணம் வாங்காத சில நடிகர்களில் நானும் ஒருவன்: கமல்

Niruban Chakkaaravarthi

சட்டப்பேரவை உறுப்பினருக்கான ஊதியத்தை ஏழை குழந்தைகளின் கல்விக்காக செலவிடுவேன்: அதிமுக வேட்பாளர் இசக்கி சுப்பையா

Karthick

”எதிர்க்கட்சிகள் விவசாயிகளை தவறாக வழிநடத்துகின்றன”- பிரதமர் மோடி!

Jayapriya