முக்கியச் செய்திகள் தமிழகம்

மத்திய அரசுக்கு உதவத் தயார்: மா.சுப்பிரமணியன்

செங்கல்பட்டு தடுப்பூசி மையத்தை மத்திய அரசு ஏற்று நடத்தினால் உதவத் தயாராக இருப்பதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.


புனேவில் இருந்து விமானம் மூலம் தமிழகம் வந்தடைந்த 3.65 லட்சம் தடுப்பூசிகள் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள மாநில தடுப்பூசி மருந்துகள் சேமிப்பு குளிர்பதன நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளது. இதனை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், “தமிழ்நாட்டில் 1299 பேர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். கருப்பு பூஞ்சை நோய் தொடர்பாக ஆய்வுசெய்ய 13 பேர் மருத்துவ வல்லுனர்கள் குழுவை அமைக்கப்பட்டுள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் அதுதொடர்பான அறிக்கையை முதல்வரிடம் கொடுக்க இருக்கிறது” என்று தெரிவித்தார்.

எந்தெந்த மாவட்டங்களுக்கு, இடங்களுக்கு கொரோனா தடுப்பூசி தேவைப்படுகிறதோ அந்த இடங்களுக்கு தடுப்பூசி அனுப்பும் வேலையை செய்து வருகிறோம் என்ற அமைச்சர் மா.சுப்பிரமணியன், “செங்கல்பட்டு தடுப்பூசி வளாகத்திற்கு மத்திய அரசு எப்போது அனுமதி கொடுத்தாலும், செயல்படுத்த தயாராக இருக்கிறோம். இல்லையெனில் மத்திய அரசு ஏற்று நடத்தினால் உதவி செய்ய தயாராக இருக்கிறோம்” என்று குறிப்பிட்டார்.

Advertisement:

Related posts

குழந்தைகளை இழந்த விரக்தியில் தாய் ரயில் முன் பாய்ந்து தற்கொலை!

Karthick

மேற்கு வங்கத் தேர்தலில் முறைகேடு செய்ய பாஜக திட்டமிட்டுள்ளது: மம்தா பானர்ஜி

Jeba

திருப்போரூரில் பாமக-வை எதிர்த்து விசிக போட்டி

Jeba