குன்னூரில் லெவல் கிராசிங் பகுதியில் போக்குவரத்து நெரிசல் காரணத்தினால் கடந்த 2 வாரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, 128 உள்ளூர் வாகனங்களுக்கு அடையாள அட்டையுடன் இயக்க அனுமதி அளிக்கப்பட்டது.
நீலகிரி மாவட்டம் குன்னூரில் கோடை சீசன் துவங்கியுள்ளது. இதனால் சமவெளி பகுதிகளில் இருந்து ஏராளமான வாகனங்கள் மலைப்பாதையில் வரும் நிலையில் குன்னூர் லெவல் கிராசிங் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு உள்ளூர் வாகனங்கள் அனுமதிக்காததால் கடந்த 2 வாரமாக வாகனங்களை இயக்காமல் நிறுத்தி வைத்து எதிர்ப்பை தெரிவித்தனர். மேலும் சுற்றுலா அமைச்சர் க.ராமசந்திரனிடம் அனுமதி அளிக்க வேண்டும் என்று வாகன ஓட்டுநர்கள் முறையிட்டனர். இதன் பேரில் 128 உள்ளூர் சுற்றுலா வாகனங்களுக்கு அடையாள அட்டையுடன் அனுமதி அளிக்கப்பட்டதால், சுற்றுலா துறை அமைச்சருக்கும், மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளனர்.
—-ரூபி.கா







