9 மாவட்டங்களுக்கு விரைவில் உள்ளாட்சி தேர்தல்

தமிழ்நாட்டில் உள்ள 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடத்தப்படும் என கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வெளியிட்டுள்ள கொள்கை விளக்க குறிப்பில், தமிழ்நாட்டில் புதிதாக உருவாக்கப்பட்ட…

தமிழ்நாட்டில் உள்ள 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடத்தப்படும் என கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வெளியிட்டுள்ள கொள்கை விளக்க குறிப்பில், தமிழ்நாட்டில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு உட்பட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு, வார்டு மறுவரையறை செய்ய வேண்டிய காரணத்தினால் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த 9 மாவட்டங்களிலும் உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடத்தப்படும் என கூறப்பட்டுள்ளது.

பள்ளிகளின் உட்கட்டமைப்பை மேம்படுத்த 2021-22ம் கல்வியாண்டு முதல் 150 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் “பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டம்” அறிமுகப்படுத்தப்படும் எனவும், ஊராட்சி ஒன்றிய ஆரம்ப, நடுநிலைப் பள்ளிகளை மேம்படுத்தி நவீன வசதிகளை பள்ளிகளுக்கு வழங்குவதே இத்திட்டத்தின் நோக்கம் எனவும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.