முக்கியச் செய்திகள் விளையாட்டு

கடின உழைப்புக்கு மாற்று எதுவும் இல்லை: விராட் கோலி

கடின உழைப்பு மாற்று எதுவும் இல்லை என இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். 

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதன் முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்தது. லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி, 151 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதன் மூலம், 5 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்திய அணி  முன்னிலை பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து 3வது டெஸ்ட் போட்டி லீட்ஸ் மைதானத்தில் நாளை(25ம் தேதி) நடைபெறவுள்ளது. இதனையொட்டி இந்திய வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி தனது டுவிட்டர் பக்கத்தில், பளு தூக்கும் பயிற்சியில் ஈடுபட்ட வீடியோவை பகிர்ந்துள்ளார். அதில் விராட் கோலி, “கடின உழைப்புக்கு மாற்று எதுவும் இல்லை” என பதிவிட்டுள்ளார்.

Advertisement:
SHARE

Related posts

சிவசங்கர் பாபா மீதான பாலியல் வழக்கு: 5 ஆசிரியைகள் தலைமறைவு

Vandhana

சதம் காணும் சங்கரய்யா

9,10,11ஆம் வகுப்பு மாணவர்கள் ஆல் பாஸுக்கான அரசாணை வெளியீடு!

Gayathri Venkatesan