தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த கால அவகாசம் வழங்க முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்த 7 மாத கால அவகாசம் கோரி உச்சநீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் மனு தாக்கல் செய்திருந்தது. இந்த மனு, தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு முன்பு விசாரணை வந்தது. அப்போது, நகர்ப்புற தேர்தலை நடத்த 7 மாத கால அவகாசம் வழங்க முடியாது என நீதிபதிகள் திட்டவட்டமாக தெரிவித்தனர்.
தமிழ்நாட்டில் சமீபத்தில் சட்டமன்ற தேர்தல் நடந்த நிலையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்துவதில் என்ன பிரச்னை எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். எத்தனை நாட்கள் அவகாசம் வேண்டும் என்பது தொடர்பாக 2 நாட்களில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யவும் மாநில தேர்தல் ஆணையத்திற்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.







