ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் இந்திய பெண் கர்ணம் மல்லேஸ்வரியின் பயோபிக் திரைப்படம் நிறுத்தப்பட்டு விட்டதாகக் கூறப்படுகிறது.
பயோபிக் படங்கள் எடுப்பது கடந்த சில வருடங்களாக அதிகரித்து வருகிறது. தென்னிந் தியாவில் சாவித்ரியின் பயோபிக்கான ’நடிகையர் திலகம்’ படம் சூப்பர் ஹிட்டானது. ஆனால், அடுத்து எடுக்கப்பட்ட சில பயோபிக் படங்கள் சரியான வரவேற்பை பெறவில்லை. தற்போது வெளியாகி இருக்கும் ’தலைவி’ படமும் வசூல் ஈட்டவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், பிரபல பளு தூக்கும் வீராங்கனை கர்ணம் மல்லேஸ்வரியின் வாழ்க்கை கதையை மையமாக வைத்து திரைப்படம் உருவாக இருந்தது. ஆந்திராவை சேர்ந்த கர்ணம் மல்லேஸ்வரி, ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் வீராங்கனை ஆவார்.
கடந்த 2000 ஆம் வருடம் ஆஸ்திரேலியாவின் சிட்னியில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில், பளு தூக்குதலில் வெண்கலப் பதக்கம் வென்றவர் இவர். அது மட்டுமின்றி பல போட்டி களில் பதக்கங்கள் வென்றுள்ளார்.
அவருடைய பயோபிக் படம் பற்றிய அறிவிப்பை தெலுங்கு தயாரிப்பாளர் கோனா வெங்கட் அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தார். ராம் கோபால் வர்மாவிடம் உதவி இயக்கு நராக பணியாற்றிய சஞ்சனா ரெட்டி இந்தப் படத்தை இயக்குவதாகவும் அறிவிக்கப் பட்டது. இதற்கிடையே, ரகுல் பிரீத் சிங் உட்பட சில நடிகைகள் இந்த பயோபிக்கில் நடிக்க இருப்பதாகக் கூறப்படது. ஆனால், படக்குழு அதை மறுத்திருந்தது. இந்நிலையில் இந்தப் படம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு விட்டதாகக் கூறப்படுகிறது.








