தொலைநோக்கு சிந்தனை கொண்டவர் பிரதமர் மோடி; எல்.முருகன்

அனைத்து சமுதாய மக்களும் முன்னேற வேண்டும் என்ற தொலைநோக்கு சிந்தனை கொண்டவர் பிரதமர் மோடி என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.   பா.ஜ.க வின் மக்கள் ஆசி யாத்திரையின் இரண்டாம் நாள் சுற்றுப்பயணம்…

அனைத்து சமுதாய மக்களும் முன்னேற வேண்டும் என்ற தொலைநோக்கு சிந்தனை கொண்டவர் பிரதமர் மோடி என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

 

பா.ஜ.க வின் மக்கள் ஆசி யாத்திரையின் இரண்டாம் நாள் சுற்றுப்பயணம் நேற்று கோவை தாராபுரத்தில் தொடங்கியது. இதில், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, மூத்த தலைவர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், சி.பி.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தொடர்ந்து பேசிய மத்திய இணையமைச்சர் எல்.முருகன், தாராபுரம் தொகுதியின் வளர்ச்சியை முன்னெடுப்போம் எனவும், தாராபுரம் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான ரயில் போக்குவரத்தை, நிச்சயம் கொண்டு வருவோம் எனவும் உறுதி கூறினார்.

 

முன்னதாக பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, நாடாளுமன்றத்தில், எல்முருகனை மத்திய இணையமைச்சராக பிரதமர் அறிவிக்கும் நிகழ்ச்சியின் போது, அவரை பேச விடாமல் அவரது அறிவிப்பு வெளியே தெரியாமலிருக்க திமுகவினரும், காங்கிரஸ் கட்சியினரும் கூச்சலிட்டு தடுத்ததாக குற்றம் சாட்டினார்.

பாஜகவின் மக்கள் ஆசி யாத்திரை, சேலம் மாவட்டம் சங்ககிரியை வந்தடைந்தது. அங்கு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோருக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அறிவித்தனர். எல்.முருகனுக்கு வேல் ஒன்றையும் பரிசாக வழங்கினர். நிகழ்ச்சியில் பேசிய எல்.முருகன், எந்த அரசியல் பின்புலமும் இல்லாத, தன்னை போன்ற 12 பேரை பிரதமர் மோடி மத்திய அமைச்சராக்கி அழகு பார்த்துள்ளதாக தெரிவித்தார். அனைத்து சமுதாய மக்களும் முன்னேற வேண்டும் என்ற தொலைநோக்கு சிந்தனை கொண்டவர் பிரதமர் மோடி என்றும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.