தடுப்பூசி விவகாரம்; கடந்த கால ஆட்சியாளர்களே காரணம் – மா.சுப்பிரமணியன் குற்றச்சாட்டு

இந்திய அளவில் தடுப்பூசிகளை செலுத்தி கொண்டவர்கள் பட்டியலில் தமிழ்நாடு 9ம் இடத்தில் இருப்பதற்கு கடந்த கால ஆட்சியாளர்களே காரணம் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். திருவள்ளூர் மாவட்டம் காட்டுப்பள்ளி காமராஜர் துறைமுகத்தின்…

இந்திய அளவில் தடுப்பூசிகளை செலுத்தி கொண்டவர்கள் பட்டியலில் தமிழ்நாடு 9ம் இடத்தில் இருப்பதற்கு கடந்த கால ஆட்சியாளர்களே காரணம் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

திருவள்ளூர் மாவட்டம் காட்டுப்பள்ளி காமராஜர் துறைமுகத்தின் சமூக பங்களிப்பு நிதியின் மூலம் பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு 47 லட்ச ரூபாய் மதிப்பில் எக்ஸ்ரே ஆய்வக கருவிகள் உள்ளிட்ட உபகரணங்களை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் பால்வளத்துறை அமைச்சர் சாமு நாசர் ஆகியோர் வழங்கினர். பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகர் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜே.கோவிந்தராஜன் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

பின்னர் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன் தமிழ்நாட்டில் 2 கோடியே 60 லட்சம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும், கடந்த ஆட்சியுடன் ஒப்பிடும் போது, தினசரி மூன்று மடங்கு அதிகமாக தடுப்பூசி செலுத்தப்படுவதாகவும் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், திமுக ஆட்சி பொறுப்பேற்று மூன்று மாதத்தில் ரூ.509 கோடி கொரோனா நிவாரணநிதியை பெற்றுள்ளது. ஆனால், கடந்த அரசு 400 கோடி மட்டுமே நிதி பெற்றதாக கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.