மானாமதுரையில் காவிரி கூட்டு குடிநீர் குழாயில் திடீர் தீ! – புகை மூட்டமான சாலைகள்!

மானாமதுரை அருகே ரூ.2 லட்சம் மதிப்புள்ள 21 காவிரி கூட்டு குடிநீர் குழாய்கள் தீயில் எரிந்து சேதம் அடைந்தன. சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே கிருகாங்கோட்டை கிராமத்தின் வழியாக செல்லும் மதுரை – ராமேஸ்வரம்…

மானாமதுரை அருகே ரூ.2 லட்சம் மதிப்புள்ள 21 காவிரி கூட்டு குடிநீர் குழாய்கள் தீயில் எரிந்து சேதம் அடைந்தன.

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே கிருகாங்கோட்டை கிராமத்தின் வழியாக செல்லும் மதுரை – ராமேஸ்வரம் நான்கு வழி சாலை ஓரமாக, பெட்ரோல் பங்க் எதிரே காவிரி கூட்டு குடிநீர் குழாய் பதிப்பதற்காக குடிநீர் குழாய்கள் போடப்பட்டிருந்தன. அந்த குழாய்கள் எதிர்பாராதவிதமாக தீப்பற்றி எரிய ஆரம்பித்தது.

சுற்றி காய்ந்த சருகுகள், குப்பைகள் கிடந்ததால் தீ மளமள என பற்றி எரிந்தது. இதில் சுமார் ரூ.2 லட்சம் மதிப்புள்ள 21 குழாய்கள் முற்றிலும் எரிந்து நாசமாகின. இதனால் நெடுஞ்சாலை முழுவதுமாக புகை மூட்டமாக மாறியது. அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கவே விரைந்து வந்து ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை அனைத்தனர்.

—அனகா காளமேகன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.