கத்திமுனையில் மாணவியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு ஸ்ரீவில்லிப்புத்தூர் போக்சோ நீதிமன்றம், சாகும்வரை ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தெற்கு மலையடிப்பட்டி தெருவைச் சேர்ந்தவர் வெனீஸ்குமார் (29). கார் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 2018 ஆம் வருடம் வருடத்துக்கு முன் 10 ஆம் வகுப்பு மாணவி ஒருவரை கத்தியை காட்டி மிரட்டி , கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இந்த சம்பவம் அப்போது அந்தப் பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டது. இதையடுத்து ராஜபாளையம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வினிஸ்குமார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இது தொடர்பான வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் நேற்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி தனசேகரன், டிரைவர் வெனிஸ்குமாருக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை வழங்கி உத்தரவிட்டார். மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தமிழக அரசு 10 லட்சம் ரூபாய் வழங்கவும் பரிந்துரை செய்தார்.








