தவறான தொடர்பை கண்டித்த மனைவியை கொலை செய்த தீயணைப்புத் துறை வீரருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
சென்னை வண்ணாரப்பேட்டை தீயணைப்பு துறை அலுவலகத்தில் தீயணைப்பு வீரராக பணியாற்றிய செந்தில்குமார் என்பவருக்கு சரண்யா என்ற மனைவி இருந்துள்ளார். செந்தில்குமாருக்கு வேறொரு பெண்ணுடன் தவறான தொடர்பு ஏற்பட்ட நிலையில் அதனை மனைவி சரண்யா கண்டித்ததாகக் கூறப்படுகிறது.
2015-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கணவன் – மனைவி இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில், மனைவி சரண்யாவை செந்தில்குமார் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். இதுதொடர்பான வழக்கை விசாரித்த சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றம், செந்தில்குமாருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
அண்மைச் செய்தி: சென்னையில், பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் கைது

இந்த தீர்ப்பை எதிர்த்து செந்தில்குமார் செய்த முறையீட்டு மனு, சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஆர்.ஹேமலதா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது கொலை வழக்கை சந்தேகத்திற்கு இடமின்றி காவல்துறை நிரூபித்துள்ளதால், ஆயுள் தண்டனையை உறுதி செய்வதாக தீர்ப்பளித்த நீதிபதிகள், மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.ச்







