முக்கியச் செய்திகள் கட்டுரைகள்

லவ் லெட்டர் அனுப்பும் யுனிசெப்


முரளிகிருஷ்ணன் சின்னதுரை

உலக நோய்த் தடுப்பு வாரம் ஏப்ரல் 24-30 வரை உலகெங்கும் கடைபிடிக்கப்பட்டு  வருகிறது.  இந்தியாவில் சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை அமைச்சகம் மற்றும் ஐ.நா.வின் குழந்தைகள் நல அமைப்பு இணைந்து Long Life For all (அனைவரும் நீடூழி வாழ வேண்டும்) எனும் கருவுடன் இந்த ஆண்டு இந்தியா முழுவதும் கொண்டாடி வருகின்றன.

நல்ல உடல் நலத்துடன் நீண்ட காலம் வாழ வழிவகுக்கும் தடுப்பூசிகளின் தேவைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அனைவருக்கும் தடுப்பூசி கிடைக்க வழிவகைச் செய்வதே ‘அனைவரும் நீடூழி வாழ வேண்டும்’ என்பதின் நோக்கமாகும். உலக நோய்த்தடுப்பு வாரத்தை கொண்டாடும் விதமாக 300 ஆண்டுகளாக தடுப்பூசிகளின் தயாரிப்பு, மேம்படுத்துதல், செலுத்தும் பணியில் ஈடுப்பட்டவர்கள், ஈடுபடுவோர் ஆகியோரை நினைவுகூர்ந்து நன்றி தெரிவிக்கும் ‘லவ் லெட்டரை’ யுனிசெப் அனுப்புகிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அக்கடிதத்தில், இதுவரை நான் சந்தித்திருக்காத சிலருக்கு நன்றி தெரிவிக்கும் கடிதம் இது. அவள் பெயர் அன்னா டஸ்டஹால். எட்வர்ட் ஜென்னரால் கண்டுபிடிக்கப்பட்ட நவீன தடுப்பூசி செலுத்திக் கொண்ட மூன்று வயது இந்திய பெண் குழந்தை. 14, ஜூன் 1802 அன்று செலுத்தப்பட்டது.அத்தடுப்பூசி அவரை சின்னம்மையிலிருந்து பாதுகாத்தது. இந்த தடுப்பூசி பல நூற்றாண்டுகளாக வட ஆப்ரிக்க மருத்துவர்களின் கண்டுபிடிப்புகள் மற்றும் எதிர்காலத் தலைமுறையினரை நோயிலிருந்தும் மரணத்திலிருந்தும் பாதுகாக்கும் எல்லா வழிகளையும் தேடிய கானஸ்டான்டி நோபுளை சேர்ந்த பாட்டிகள் மற்றும் ஆயிரத்திற்கு மேற்பட்ட மருத்துவர்களின் முயற்சிகள் ஆகியவற்றின் தாக்கத்தின் விளைவாக கண்டுபிடிக்கப்பட்டது.

அந்தத் தேடுதலை நாம் நன்கறிவோம். யுனிசெப், 75 ஆண்டுகளாக உலகின் மிகப் பெரியளவில் தடுப்பூசிகளை கொள்முதல் செய்வதோடு, உலகில் 45 விழுக்காடு குழந்தைகளின் நோய்த் தடுப்பு பாதுகாப்பினை உறுதி செய்திருக்கிறது. ஒருகாலத்தில் நாமும் குழந்தைகளாக இருந்தோம். தடுப்பூசி இல்லையென்றால், நம்மில் பலர் இன்று இல்லாமல் இருக்கவும் வாய்ப்பு இருக்கிறது.

நாம் குழந்தைகளாக இருக்கும் போது நம்மை அழைத்து கொண்டு தடுப்பூசிகள் செலுத்திய பெற்றோர்களுக்கும், தாத்தாகளுக்கும், பாட்டிகளுக்கும் நன்றி.

இக்கடிதம் யுனிசெப் – ல் இருக்கும் எல்லோராலும், தடுப்பூசியால் இன்று வாழ்ந்து கொண்டிருக்கும் ஒவ்வொரு குழந்தைகள் சார்பிலும் வெளியிடப்படுகிறது. ஏனெனில், இதை உறுதிபடுத்துவதற்கு உழைத்த ஒவ்வொருவருக்கும் நாங்கள் நன்றி சொல்ல விரும்புகிறோம். தடுப்பூசிகளுக்கு நன்றி, ஒவ்வொரு குழந்தையும் நீண்டநாள் பாதுகாப்பாக வாழ, அர்ப்பணிப்பு,அரவணைப்பு மற்றும் அன்புடன் வழங்கியமைக்காக போலியோவுக்கு எதிராக தடுப்பூசி கண்டுபிடித்த தீநுண்மியல் வல்லுநர் ஜோனாஸ் சால்க் அவர்களுக்கு நன்றி.

மஞ்சள் காய்ச்சலுக்குத் தடுப்பு மருந்து தயாரிப்பதற்கு தங்களது அணியினரின் இரத்தத்தை கொசுகளுக்கு இரையாகத் தந்த நோபல் பரிசு வெற்றியாளர் மேக்ஸ் தேய்லர் அவர்களுக்கு நன்றி. தடுப்பூசிகள் தயாரிக்க அரும்பாடு படும் அறிவியல் ஆராய்ச்சியாளர்களுக்கு நன்றி.  பெரிய அளவில் தடுப்பூசி தயாரிப்பில் இந்தியா முக்கியப் பங்கு வகிக்கிறது. தடுப்பூசி தொழிற்சாலைகளில் குடுவைகளில் தடுப்பூசி மருந்துகளை நிரப்பும் பணியாளர்களுக்கு நன்றி.

கடைசி எல்லை வரை தடுப்பூசிகளை பாதுகாப்பாக கொண்டு சேர்க்க உதவும், தடுப்பூசி ஊர்திகள், தடுப்பூசி கொண்டு செல்லும் பெட்டி, ஆழ் உறைக்கருவி மற்றும் குளிர்சாதன பெட்டி ஆகியவற்றை தயாரிக்கும் பணியில் ஈடுப்பட்டிருக்கும் பொறியாளர்களுக்கு நன்றி.

மழை வெள்ளம் பாராது ஆற்றில் பயணித்து, பனி மலையில் பல மைல்கள் ஏறி, கடும் வெயில் புழுதியில் பயணித்து குழந்தைகளுக்குத் தேவையான தடுப்பூசிகளை கொண்டு சேர்க்கும் படகோட்டிகள், விமானிகள், ஓட்டுநர்கள், ஆயிரமாயிரம் சுகாதாரப் பணியாளர்கள், செவிலியர்கள் மற்றும் தலைமை செவிலித் தாய்கள், மாற்றுமுறையில் தடுப்பூசிகளை கொண்டு சேர்ப்போர் ஆகியோருக்கு நன்றி.

ஆண்டுதோறும், ஏறத்தாழ 2.7 கோடி குழந்தைகள் மற்றும் 2.9 கோடி கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு நன்றி. உங்களால் தான் உலகளவில் தடுப்பூசி செலுத்தும் திட்டங்களை பெரியளவில் செயல்படுத்தும் நாடுகளில் இந்தியாவை முன்னிலைப் படுத்தப்படுகிறது. பரந்து விரிந்து கிடக்கும் இந்தியாவின் கடைசி எல்லை வரை தடுப்பூசிகளை கொண்டு சேர்த்து செயல்படுத்த உதவிடும் நிர்வாகிகளுக்கு நன்றி.

இருந்தபோதிலும், சில குழந்தைகள் தடுப்பூசிகள் செலுத்தப்படாமல் விடுபட்டு போயிருக்கின்றனர், அவர்களுக்கு கடுமையான நோய்கள் பாதிக்க வாய்ப்புகள் உள்ளன. பெருந்தொற்று காலத்தில் இருந்து மீண்டு வரும் இவ்வேளையில், ஒவ்வொரு குழந்தைக்கும் சென்று சேரும் அளவிற்கு வலுவான சுகாதார கட்டமைப்பை உருவாக்கும் வாய்ப்பு நம் தலைமுறைக்கு கிடைத்துள்ளது.

இது தலைவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கடிதம், சுகாதாரப் பணிகளை முன்னெடுத்ததற்காக, ஏனெனில் இவ்வளவு தூரம் வந்ததடைந்ததற்கும், தரமான சுகாதாரசேவை முதலீடு செய்து இன்னும் பல தூரம் செல்வதற்கும் அவர்கள் தான் முதன்மையானவர்கள். இலட்சக்கணக்கான குழந்தைகள் தடுப்பூசிகளை பெறுவதற்கு உறுதுணையாக இருந்த இந்திய அரசுக்கு நன்றி.

நம்பிக்கை நட்சத்திரங்கள், சமூக செயற்பாட்டாளர்கள், ஊடகங்கள், பொது சமூக நிறுவனங்கள், வளர்ச்சியில் பங்கெடுக்கும் பங்குதாரர்கள் மற்றும் கல்வியாளர்கள் ஆகியோருக்கு நன்றி அவர்கள் சுற்றுபுறத்தில் உள்ள குழந்தைகளை தடுப்பூசி செலுத்திக் கொள்ள செய்ததற்காக. இன்னும் ஒரு நபருக்குத் தான் நன்றி சொல்ல வேண்டும். அவர் நீங்கள் தான்.

ஏனெனில் நீங்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்வதோடு உங்கள் குழந்தைகளுக்கும் தடுப்பூசி செலுத்தினால், மானுட சமூகத்தை காக்கும் சங்கிலியில் நீங்களும் ஓர் அங்கமாக ஆகிறீர்கள். நீங்கள் தான் அர்ப்பணிப்பு, ஒத்துழைப்பு மற்றும் அன்பு ஆகியவற்றின் மூலம் மானுட சமூகத்திற்கு என்னவெல்லாம் செய்யலாம் என்பதற்கு வாழும் சாட்சி.

நன்றி, அனைவரும் நீடுழி வாழ்வோம் #LongLifeForAll” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

சரியான நேரத்தில் சரியான தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ளுங்கள் என உலக நோய்த் தடுப்பு வாரத்தின் செய்தியாகக் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

முரளிகிருஷ்ணன் சின்னதுரை, ஊடகவியலாளர்,

இந்திய தூதர், இன்டர்நியூஸ் ஜர்னலிசம் நெட்வொர்க்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

நடுவானில் பிறந்த பெண் குழந்தை!

Halley Karthik

இரட்டை கொலை, 1,000 சவரன் நகை கொள்ளை – குற்றவாளி சிக்கியது எப்படி?

G SaravanaKumar

மகளிர் ஐபிஎல் தொடரை நடத்த தீவிரம் காட்டும் பிசிசிஐ

EZHILARASAN D