தமிழக வீரர் நடராஜனை இந்திய T-20 உலகக் கோப்பை அணியில் இடம் பெற செய்ய வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் போட்டிகள் கொண்டாட்டமாக நடைபெற்று வரும் சூழலில், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வரும் தமிழக வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் சிறப்பாக விளையாடி வருகிறார்.
இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர் கூறும்போது, நடராஜன் திறமையை கண்டு தான் வியந்ததாகவும், அவரை இந்த ஆண்டின் இறுதியில் நடக்கவிருக்கும் T-20 உலக கோப்பை தொடரில் இந்திய அணிக்காக கட்டாயம் விளையாட வைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் அவரது யார்க்கர் பந்துகள் குறித்து நாம் அனைவரும் அறிந்ததே என தெரிவித்துள்ள காவாஸ்கர், டெத் ஓவர்ஸ் எனப்படும் 16 முதல் 20 ஓவர்களுக்கு இடையேயான ஓவர்களை துல்லியமாக வீசி, முக்கியத்துவம் வாய்ந்த ஒரு திருப்பத்தை ஏற்படுத்தும் வல்லமை கொண்டவர் நடராஜன் எனவும் கவாஸ்கர் தெரிவித்துள்ளார் .
தொடர்ந்து பேசிய கவாஸ்கர், நடராஜனை கடந்த ஆண்டு இந்திய அணி தவறவிட்டு உள்ளதாகவும், இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெறும் T-20 ஓவர் உலக கோப்பை தொடரில் நடராஜன் பெயர் நிச்சயம் இடம் பெறும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.








