முக்கியச் செய்திகள் தமிழகம்

வடசென்னை அனல் மின் நிலையத்தின் 3-ம் நிலை பணிகள் – அமைச்சர் விளக்கம்

வட சென்னை அனல் மின் நிலையத்தின் மூன்றாம் நிலை பணிகள் இந்த ஆண்டு டிசம்பர் மாத இறுதிக்குள் முடிக்கப்படும் என அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.

 

மின்னகம் நுகர்வோர் சேவை தொடங்கி ஓராண்டு நிறைவு பெற்ற நிலையில் சென்னை அண்ணா சாலையில் உள்ள தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகத்தில் அமைந்துள்ள மின்னகத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், மின் நுகர்வோர் குறைகளை போக்க கடந்த ஆண்டு ஜூன் 20 ஆம் தேதி முதலமைச்சர் மின்னகம் நுகர்வோர் சேவையை தொடங்கி வைத்ததாக குறிப்பிட்டார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

 

மின்னகம் நுகர்வோர் சேவை தொடங்கியதில் இருந்து ஓராண்டில் 99.45 சதவீதம் புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது என்றும் 9.16 லட்சம் புகார்கள் ஓராண்டில் பெறப்பட்டத்தில் 9.11 லட்சம் புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். சமூக வலைத்தளங்களின் மூலம் வரும் புகார்களுக்கு தீர்வு கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

 

ஒரே நேரத்தில் ஒரு லட்சம் புகார்கள் வந்தாலும் அதை பதிவு செய்யும் வகையில் மின்னகம் செயலி வாயிலாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வட சென்னை அனல் மின் நிலையம் மூன்றாம் நிலை பணிகள் இந்த ஆண்டு டிசம்பர் மாத இறுதிக்குள் முடிக்கப்படும். தமிழ்நாட்டில் மூன்று நாட்கள் மின் விநியோகம் பாதிக்கப்பட்டது அதன் பின்னர் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

 

மேலும் மின்னகம் ஒரு வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வு என தெரிவித்த அமைச்சர் செந்தில்பாலாஜி, இன்று ஸ்காட்லாந்து, லண்டன் உள்ளிட்ட நாடுகளுக்கு 5 பேர் கொண்ட குழுவாக கடலில் காற்றாலை தயாரிக்கும் பணி தொடர்பாக வெளிநாடு பயணம் செல்கிறோம் என கூறினார்.

 

– இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

அதிமுக பொதுக்குழு விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் இ.பி.எஸ் தரப்பு மேல்முறையீடு!

Web Editor

டிப்ளமோ நர்சிங் படிப்பில் சேர இன்று முதல் விண்ணப்பபிக்கலாம்

G SaravanaKumar

நாடு முழுவதும் கொரோனாவால் ஒரே நாளில் 376 பேர் உயிரிழப்பு

Halley Karthik