முக்கியச் செய்திகள் இந்தியா

‘அக்னிபாத்’ போராட்டம்: பீகாரில் ரயில் சேவை ரத்து?

அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக தொடர்ந்து நடைபெறும் போராட்டம் காரணமாக இன்றும் பீகார் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

17 வயது நிரம்பிய இளைஞர்கள் 4 ஆண்டுகள் ராணுவத்தில் பணியாற்றலாம் என பாதுகாப்புத்துறை சமீபத்தில் அறிவிப்பை வெளியிட்டது. இவர்கள் அக்னி வீரர்கள் என அழைக்கப்படுவார்கள் என்றும் இந்த திட்டத்திற்கு அக்னிபாத் (அக்னிபாதை) என்றும் பெயரிடப்பட்டது. ஆனால் இவர்களில் 75 சதவிகிதமானோர் 4 ஆண்டுகளுக்கு பின்னர் கட்டாயமாக வெளியேற்றப்படுவார்கள் என பாதுகாப்புத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பீகார், உத்தரப் பிரதேசம், தெலங்கானா உள்ளிட்ட பல மாநிலங்களில் போராட்டம் வெடித்தது. ரயில்கள் எரிக்கப்பட்டன. தெலங்கானாவில் ரயில்வே பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால் பதட்டம் தொடர்ந்து நீடித்து வருகிறது.

கடும் எதிர்ப்புக்கு மத்தியில் இத்திட்டத்தின் கீழ் விரைவில் ஆட்சேர்ப்பு நடைபெறும் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சமீபத்தில் தெரிவித்தார். சூழல் இவ்வாறு இருக்க, அக்னிபாத் திட்டம் தேசத்திற்காக உருவாக்கப்பட்டது. இந்த வாய்ப்பை இளைஞர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என கடற்படை தளபதி ஹரி குமார் இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த சூழலில் பீகார் மாநிலத்தில் இந்த திட்டத்திற்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்துள்ளது. இதனால், நேற்று (ஜூன் 18) மாநிலம் முழுவதும் ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் இரவு 8 மணி வரை எந்த ரயில்களும் இயக்கப்படவில்லை. போராட்டம் தொடர்ந்து தீவிரமடைந்து வரும் நிலையில், இன்றும் ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக தகவல்கள் வெளிவந்த வண்ணமுள்ளன. இதனால் காலை 4 மணி முதல் மாலை 8 மணிவரை ரயில் சேவை நிறுத்தப்படும் என சொல்லப்படுகிறது.

நேற்றைய போராட்டத்தில் ரயில்வே காவல் நிலையம் மற்றும் போலீசாரின் வானங்கள் கொளுத்தப்பட்டன. பல பகுதிகளில் காவலர்கள் காயமடைந்துள்ளனர். கடைகளை அடைக்க வற்புறுத்தி போராட்டக்காரர்கள் கற்களை வீசி தாக்குதல்களை நடத்தியதாக காவல்துறை தரப்பில் சொல்லப்படுகிறது.

நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் நடைபெற்ற போராட்டங்களால் 350 ரயில்கள் ஒட்டுமொத்தமாக ரத்து செய்யப்பட்டன. உத்தரப் பிரதேசத்தில் மட்டும் சுமார் 250 பேர் வன்முறையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

தரமான சம்பவத்தை நிகழ்த்தி விட்டு விடைபெற காத்திருக்கும் தென் மேற்கு பருவமழை..!

Saravana Kumar

சர்ச்சையான கிரெட்டா தன்பெர்க் ட்விட்!

பரிகார பூஜை செய்வதாகக் கூறி நகைகளை திருடிய நபர் கைது!

Jeba Arul Robinson