35.7 C
Chennai
April 19, 2024
முக்கியச் செய்திகள் இந்தியா

சொந்த ஆயுதங்களை வைத்து எதிர்காலங்களில் போரிடுவோம்: இந்திய கடற்படை

மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலம் தயாரிக்கப்படும் நமது சொந்த ஆயுதங்களை கொண்டு வருங்கால போர்களில் ஈடுபட முடியும் என கடற்படை துணை தளபதி நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.

இந்திய கடற்படை சார்பில் பாதுகாப்பு கண்காட்சி (டிப்எக்ஸ்போ) நடைபெற்றது. தன்னம்பிக்கை, புதுமையான தொழில்நுட்பம் மற்றும் உள்நாட்டுமயமாக்கலை எடுத்துரைக்கும் விதமாக இந்த பாதுகாப்பு கண்காட்சி நடைபெற்றது. இதில் கடற்படை தளபதி ஆர்.ஹரிகுமார் கலந்து கொண்டு பார்வையிட்டார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கடற்படை துணை தளபதி சதீஷ் என் கோர்மாடே, டிப்எக்ஸ்போ-2022 நிகழ்ச்சியானது (பாதுகாப்பு கண்காட்சி) இந்திய நிறுவனங்கள் தங்களது திறமைகளை வெளிக்காட்டுவதற்கான ஒரு சிறந்த சந்தர்ப்பம் ஆக அமைந்து உள்ளது. பெருமைக்கான பாதை என்பது இதன் கருப்பொருளாக உள்ளது. இதற்கு இந்திய நிறுவனங்கள் தரப்பில் இருந்து சிறந்த முறையில் வரவேற்பு அளிக்கப்பட்டு உள்ளது.

வளர்ச்சி, ஆத்மநிர்பாரத் ஆகியவற்றின் ஒரு பகுதியாக இந்தியா விளங்குகிறது. வான், நீருக்கு அடியில், தரையின் மேற்பரப்பில் என அனைத்து போர் நிலைகளிலும், போரிடும் முறையில் பெரிய அளவில் நாம் வளர்ந்து இருக்கிறோம். நடுத்தர மற்றும் குறுகிய தொலைவுக்கான ஏவுகணை செலுத்துவது, நீர்மூழ்கி கப்பலில் இருந்து ஏவுகணைகளை செலுத்துவது, வானில் இருந்து கப்பலுக்கான ஏவுகணை என கடற்படையில் நாம் வளர்ச்சி கண்டு வருகிறோம்.

வருங்கால போர்களை மேக் இன் இந்தியா திட்டங்களின் மூலம் நமது சொந்த தொழிற்சாலைகளில் உருவான நமது சொந்த ஆயுதங்களை கொண்டு போரிட முடியும் என்பதில் நான் முழு நம்பிக்கையுடன் இருக்கிறேன். பிரதமரின் இந்த தொலைநோக்கு பார்வை சாதனை படைக்கும். அதற்கேற்ப இந்த டிபன்ஸ்எக்ஸ்போ நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இந்த வளர்ச்சியை 2 முதல் 3 ஆண்டுகளில் அடைந்துள்ளோம் என அவர் பெருமையுடன் கூறியுள்ளார்.

நமது சொந்த ஆயுதங்களை கொண்டு வருங்கால போர்களில் ஈடுபட முடியும் என கடற்படை துணை தளபதி நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading