“தமிழகத்தின் வளர்ச்சியை கட்டமைக்கும் நம் அண்ணா ஆட்சியை மீண்டும் நிறுவிட உறுதியேற்போம்” – எடப்பாடி பழனிசாமி!

திராவிட இயக்கத்தின் கொள்கைகளை மக்கள் இயக்கமாக வளர்த்தெடுத்த ஒப்பற்ற தலைவர் பேரறிஞர் அண்ணா என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 118-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “தமிழக மக்கள் ஒவ்வொருவரின் உள்ளத்திலும் தன்மான உணர்வை விதைத்து, சமூகநீதி, சமத்துவம், சுயமரியாதை, மாநில உரிமைகள் என திராவிட இயக்கத்தின் கொள்கைகளை மக்கள் இயக்கமாக வளர்த்தெடுத்த ஒப்பற்ற தலைவர் நம் பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்கள்.

அதிகாரத்தை விட கொள்கையையும்,
பதவியை விட மக்களையும்,
தனிமனிதப் புகழை விட சமூகத்தின் முன்னேற்றத்தையும் முன்னிறுத்திய அண்ணாவின் அரசியல் வாழ்வு, தலைமுறைகள் கடந்து வழிகாட்டும் கலங்கரை விளக்கம்.

தமிழினத்தின் தன்மானக் குரலான நம் கொடியாகவும் கொள்கையாகவும்
என்றும் வீற்றிருக்கும்
பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களை, அவர்தம் பிறந்தநாளில் போற்றி வணங்குகிறேன்.

மக்கள் நலனுக்கு முற்றிலும் எதிரான ரீல்ஸ் அரசியல் மோகத்தில் இருந்து தமிழகத்தை விடுவித்து, தமிழகத்தின் வளர்ச்சியை கட்டமைக்கும் நம் அண்ணாயிசம் ஆட்சியை மீண்டும் நிறுவிட இந்நாளில் உறுதியேற்போம்!

வாழ்க அண்ணா நாமம்! இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.