வீரபாண்டிய கட்டபொம்மனின் தியாகத்தையும், தேசப்பற்றையும் போற்றி வணங்குவோம் – நயினார் நாகேந்திரன்!

வீரபாண்டிய கட்டபொம்மன் தியாகத்தையும், தேசப்பற்றையும் போற்றி வணங்குவோம் என்று அணியினர் நாகேந்திரன் தெரிவிவித்துள்ளார்

தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “வீரத்தின் அடையாளமாகவும், விடுதலை உணர்வின் திருவுருவமாகவும் திகழ்ந்த மாவீரர் வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களின் நினைவு தினம் இன்று!

ஆங்கிலேயர்களின் அடக்குமுறைக்கும், அந்நிய ஆட்சிக்கும் அடிபணிய மறுத்து, தாய்நாட்டின் சுதந்திரத்திற்காகத் துணிச்சலுடன் போராடிய அவரது வீரமும், தன்னலமற்ற தியாகமும் இந்திய வரலாற்றில் என்றும் அழியாத இடத்தைப் பெற்றுள்ளன.

தாய்மண்ணின் மானத்தையும், மக்களின் உரிமைகளையும் காக்கத் தன் வாழ்வையே அர்ப்பணித்த மாவீரர் வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களின் தியாகத்தையும், தேசப்பற்றையும் போற்றி வணங்குவோம். அவரது வீர வரலாறு தலைமுறைகள் தோறும் நம் இளைய தலைமுறைக்கு ஊக்கமளிக்கட்டும்”! இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.