அம்பேத்கரின் 136-வது பிறந்தநாள் தமிழகம் முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “இந்திய அரசியலமைப்பின் தந்தை, அண்ணல், டாக்டர் B. R. அம்பேத்கர் பிறந்த தினமான இன்று, அவரது புகழைப் போற்றி வணங்குகிறோம்.
கல்வி, சம உரிமை, சமூக நீதி இவை அனைத்தும் கொண்ட சமூகத்தை உருவாக்குவதே அண்ணல் அம்பேத்கர் அவர்களின் கனவு. மக்கள் வாழ்வில் உண்மையான மாற்றத்தை உருவாக்குவதே, அவருக்கான சிறந்த அஞ்சலியாக இருக்க முடியும்.
அண்ணல் டாக்டர் அம்பேத்கர் அவர்கள் கனவை நனவாக்க, நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.







