அம்பேத்கரின் பிறந்தநாள் : ‘சமத்துவ சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்று உறுதியேற்போம்’ – எடப்பாடி பழனிசாமி!

அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாளில் அவர்தம் பெரும் புகழைப் போற்றி வணங்குகிறேன் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அம்பேத்கரின் 136-வது பிறந்தநாள் தமிழகம் முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “சமத்துவம், சமூக நீதி, மானுடப் பற்று ஆகியவற்றின் சின்னமாக விளங்கிய சட்டமேதை, புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாளில் அவர்தம் பெரும் புகழைப் போற்றி வணங்குகிறேன்.

அவரின் சிந்தனைகளும், அரசியல் பார்வையும் இந்திய அரசியலமைப்பின் அடித்தளமாக அமைந்து, ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்தியது.

சமத்துவ சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்ற அவரது கனவை நனவாக்க, நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட இந்நாளில் உறுதியேற்போம்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.