“இருள் விலகட்டும், மகிழ்ச்சி ஒளி பரவட்டும்”- அன்புமணி ராமதாஸ் தீபாவளி வாழ்த்து..!

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் பரவலான மக்கள் கொண்டாடக்கூடிய பண்டிகைகளில் ஒன்று தீபாவளி. இந்த நாளில் மக்கள் பட்டாசுகள் வெடித்து மகிழ்வர். இந்த ஆண்டு வரும் அக்டோபர் 20ல் தீபாவளி கொண்டாடப்படுகிறது. இதனை தொடர்ந்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

இருள் இன்றுடன் விலகட்டும், மகிழ்ச்சி ஒளி எந்நாளும் பரவட்டும்! இருளை விலக்கி, ஒளி கொடுக்க வரும் தீபஒளித் திருநாளை தமிழ்நாட்டிலும், உலகின் பிற பகுதிகளிலும் கொண்டாடும் அனைவருக்கும் எனது உளமார்ந்த தீப ஒளி வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்”

என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.