தமிழ்நாட்டில் 8000-க்கும் கீழ் குறைந்த கொரோனா தொற்று

தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8,000-க்கும் கீழ் குறைந்துள்ளது. மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் புதியதாக 7,524 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளதாகவும், பாதிக்கப்பட்ட 23,938 பேர் குணமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்புக்கு…

தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8,000-க்கும் கீழ் குறைந்துள்ளது.

மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் புதியதாக 7,524 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளதாகவும், பாதிக்கப்பட்ட 23,938 பேர் குணமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில், ஒரே நாளில் 37 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் தினசரி கொரோனா பாதிப்பு 1,223 ஆக குறைந்துள்ளது. கோவை மாவட்டத்தில் 1,020 பேருக்கும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 691 பேருக்கும், திருப்பூர் மாவட்டத்தில், 609 பேருக்கும், மாநிலத்திலேயே குறைந்தபட்சமாக பெரம்பலூரில் 17 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.

நேற்று, தமிழ்நாட்டில் 10,000-க்கும் கீழ் கொரோனா பாதிப்பு குறைந்திருந்த நிலையில், இன்று 8000-க்கும் கீழ் குறைந்த கொரோனா தொற்று குறைந்துள்ளது.

➤புதிய பாதிப்பு-7,524
➤மொத்த பாதிப்பு-34,04,762
➤சிகிச்சையில்-1,38,878
➤உயிரிழப்பு-37
➤மொத்த உயிரிழப்பு-37,733

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.