பாஜக வேட்பாளர்களை ஆதரித்து, மாநில தலைவர் அண்ணாமலை நாளை முதல் பரப்புரை

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை நாளை முதல் பரப்புரையில் ஈடுபட உள்ளார். தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள்…

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை நாளை முதல் பரப்புரையில் ஈடுபட உள்ளார்.

தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு, வரும் 19-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான வேட்புமனு தாக்கல், நேற்று மாலையுடன் நிறைவடைந்த நிலையில், மொத்தம் 74,416 வேட்பு மனுக்கள் பெறப்பட்டுள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

அண்மைச் செய்தி: தமிழ்நாட்டில் 8000-க்கும் கீழ் குறைந்த கொரோனா தொற்று

இந்நிலையில், தங்கள் வேட்பாளர்களை ஆதரித்து அனைத்து கட்சி தலைவர்களும் பரப்புரை மேற்கொள்ளும் பணிகளில் ஈடுபட உள்ளனர். அந்த வகையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து நாளை முதல் பரப்புரையில் ஈடுபட உள்ளார். நாளை பிற்பகல் 3 மணியளவில் சென்னையிலிருந்து அவர் தனது பரப்புரையை தொடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.