சிறுத்தை ஒன்று சூரிய நமஸ்காரம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
பெரும்பாலும் இந்துக்கள் காலை எழுந்தவுடன் சூரிய நமஸ்காரம் செய்வர். அதேபோல் யோகா பயிற்சியிலும் சூரிய நமஸ்காரம் எனப்படும் சூரியனை வணங்குதல் இடம் பெறுகிறது. உடலுக்கும் மனதுக்கும் நன்மையை பெற்றுத் தரும் இந்த சூரிய நமஸ்காரம், காலம் காலமாக தமிழ்ச் சமூகத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதையும் படியுங்கள் : கூகுளை சீண்டிப் பார்த்த எலான் மஸ்க் – நெட்டிசன்களை சிரிப்பலையில் ஆழ்த்திய மீம்
மனிதர்கள் செய்யும் செயல்களை பல நேரங்களில் விலங்குகளும் செய்வதை சமூக வலைதளங்களின் மூலம் நாம் பார்த்து வருகிறோம். சைபீரியன் ஹஸ்கி எனும் நாய் இனம், மனிதர்கள் பேசுவது போன்ற சத்தத்தை எழுப்புவது, செல்லப்பிராணிகள் தங்களது உரிமையாளருடன் யோகா பயிற்சி செய்வது, பொருட்களை எடுத்துத் தருவது என விலங்குகளின் செயல்பாடுகளை பார்த்திருப்போம்.
Surya Namaskar by the leopard 👌👌
Via @Saket_Badola pic.twitter.com/jklZqEeo89— Susanta Nanda (@susantananda3) March 27, 2023
அந்த வகையில், சிறுத்தை ஒன்று சூரிய நமஸ்காரம் செய்வது போன்ற வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சுஷாந்த நந்தா என்ற ட்விட்டர் பயனர், சிறுத்தை ஒன்று சோம்பல் முறிக்கும் வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, ”சிறுத்தையின் சூரிய நமஸ்காரம்” என்று பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.







