கூகுளை சீண்டிப் பார்த்த எலான் மஸ்க் – நெட்டிசன்களை சிரிப்பலையில் ஆழ்த்திய மீம்

கூகுள் மேப்ஸ் ஆப்பை விமர்சித்து எலான் மஸ்க் வெளியிட்ட மீம் தற்போது சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. நாம் முன் பின் அறிமுகம் இல்லாத இடத்திற்கு செல்லும்போது, அப்பகுதியில் இருப்பவர்களிடம் சரியான வழியை…

கூகுள் மேப்ஸ் ஆப்பை விமர்சித்து எலான் மஸ்க் வெளியிட்ட மீம் தற்போது சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

நாம் முன் பின் அறிமுகம் இல்லாத இடத்திற்கு செல்லும்போது, அப்பகுதியில் இருப்பவர்களிடம் சரியான வழியை கேட்டறிந்து செல்வோம். அல்லது ஏற்கனவே அந்த இடங்களுக்கு சென்று வந்தவர்களிடம், எவ்வாறு செல்வது, எவ்வளவு தூரம் செல்ல வேண்டும், என்பது பற்றி விசாரிப்போம். பல நேரங்களில் இது நமக்கு உதவினாலும், சில நேரங்களில் நமக்கு காலதாமதம் ஏற்படுவதும், தவறான வழியை அடைவதும் நடைபெறத்தான் செய்கிறது.

இவ்வாறான சிக்கல்களை தவிர்ப்பதற்காக கூகுள் நிறுவனம், ’கூகுள் மேப்ஸ்’ என்ற ஆப்-ஐ அறிமுகப்படுத்தி, மக்கள் தாங்களாகவே, செல்ல வேண்டிய வழிகளை எளிதாகவும், சரியாகவும் கண்டுபிடிக்க உதவுகிறது. தூரத்தை கணக்கிடுவது, பேருந்து, ரயில் வசதிகளை அறிந்து கொள்வது, போக்குவரத்து நெரிசல் இல்லாமல் செல்வதற்கான வழியை தெரிந்து கொள்வது என பல்வேறு அப்டேட்ஸ்களும் இதில் சேர்க்கப்பட்டுள்ளன.

இதையும் படியுங்கள் : அதிமுக பொதுக்குழு முதல் பொதுச் செயலாளர் தேர்தல் தீர்ப்பு வரை……

இத்தகைய வசதிகளைக் கொண்ட கூகுள் மேப்ஸ்-ஐ இன்று ஏராளமானோர் பயன்படுத்தி வருகின்றனர். என்னதான் பாசிட்டிவ் விஷயங்கள் இருந்தாலும், தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்படுவது போன்ற நெகட்டிவ் விசயங்களும் இதில் இடம்பெறுகின்றன. இதனால் பயனர்களின் விமர்சனங்களுக்கு ’கூகுள் மேப்ஸ்’ விதிவிலக்கல்ல.

https://twitter.com/elonmusk/status/1640416516075290624?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1640416516075290624%7Ctwgr%5Eb267b04bc8d31e57eb0afbb1065826f59c54f4f3%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.hindustantimes.com%2Ftrending%2Felon-musk-recalls-life-before-google-maps-with-funny-meme-101679975521260.html

இந்நிலையில், ட்விட்டர் சிஇஓ எலான் மஸ்க், தனது ட்விட்டர் பக்கத்தில் மீம் ஒன்றை பதிவிட்டுள்ளார். ‘கூகுள் மேப்ஸ்-க்கு முந்தைய வாழ்க்கை’ என்ற வாசகத்துடன் இருக்கும் புகைப்படத்தில், காரில் இருவர் அமர்ந்து கொண்டு பெரிய வரைபடத்தை பார்த்தபடி உட்கார்ந்துள்ளனர். இதற்கான கேப்ஷனில்  ’அந்த அருமையான பழைய நாட்கள்’ என்று எலான் மஸ்க் பதிவிட்டுள்ளார். இந்த நகைச்சுவையான மீம் தற்போது இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.