நானி படங்களிலேயே ’தசரா’ பெரிய ஓப்பனர் – லேட்டஸ்ட் அப்டேட்!

நானியின் தசரா முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதால் அதிக டிக்கெட் தேவை காரணமாக பல இடங்களில் அதிகாலை காட்சிகள் திறக்கப்பட்டுள்ளன.  நானியின் அடுத்த படமான தசரா இந்த வார இறுதியில் வெளியாக உள்ளது. ரிலீஸுக்கு…

நானியின் தசரா முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதால் அதிக டிக்கெட் தேவை காரணமாக பல இடங்களில் அதிகாலை காட்சிகள் திறக்கப்பட்டுள்ளன. 

நானியின் அடுத்த படமான தசரா இந்த வார இறுதியில் வெளியாக உள்ளது. ரிலீஸுக்கு முன்பே ரசிகர்கள் இப்படத்தை புஷ்பா மற்றும் கேஜிஎஃப் உடன் ஒப்பிட்டு வருகின்றனர். படத்தின் முன்பதிவு சில நாட்களுக்கு முன்பு திறக்கப்பட்டது. இந்த படத்தின் டிக்கட் முன்பதிவு நானி படங்களிலேயே அதிக முன்பதிவு மற்றும் சிறந்த ஓபனிங் என்ற சாதனையை படைக்கும் வகையில் தொடர்ந்து புக்கிங் நடந்து வருகிறது.

தசரா திரைப்படம் மார்ச் 30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. புதன்கிழமை காலை வரை, படம் முதல் நாள் இந்தியா முழுவதும் 86,000 டிக்கெட்டுகள் விற்று, அனைத்து மொழிகளிலும் ரூ.1.6 கோடி வசூல் செய்துள்ளது. இதில் அசல் தெலுங்கு பதிப்பிலிருந்தே ரூ.1.57 கோடியை வசூலித்துள்ளது.

கடந்த இரண்டு நாட்களில் படத்தின் முன்பதிவு வேகம் அதிகரித்து நானி புதிய சாதனைகளை படைக்கும் என வர்த்தக நிபுணர்கள் கணித்துள்ளனர். இது இதன் விளைவாக, நானியின் இந்த படம் அதிகபட்ச ஓபனிங்கை பதிவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.